இந்தியாவின் புகழ்பெற்ற அல்போன்சா உள்ளிட்ட உயர்ரக மாம்பழங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இதில் புழுக்கள் போன்றவை இருப்பதாக கூறி, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
அதன்படி 28 நாடுகளை கொண்ட ஐரோப்பிய
கூட்டமைப்பு அல்போன்சா மாம்பழங்களை இறக்குமதி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. மேலும் இந்தியாவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யவும், கடந்த
மே மாதம் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை அமலுக்கு வந்து ஒரு ஆண்டை எட்டியுள்ள நிலையில், தற்போது மாம்பழ இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய வர்த்தக மந்திரி மேல்-சபையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருந்தார். எனினும் காய்கறி இறக்குமதி மீதான தடை நீடிப்பதாகவும்
அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment