நேபாள வனப்பகுதியில் இருந்து பீகாருக்குள் வந்த காட்டு யானை ஒன்று தன்னை விரட்ட வந்த பொலிசாரை பந்தாடியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள சிதாமாரி மாவட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாக பஜ்பாட்டி பொலிசாருக்கு மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், 4 வனச்சரக அலுவலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மதம் கொண்டு பிளிறித் திரிந்த யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது ஏராளமான மக்கள் சூழ்ந்துக்கொண்டு
கூச்சலிட்டதால் யானையின் வெறி மேலும் அதிகமானதோடு, ஆத்திரத்தில் அந்த யானை, தன்னை பின்தொடர்ந்து வந்த காவல் நிலைய ஜீப் ஓட்டுனரான 40 வயது ஹுலாஸ் ராய்(40) என்பவரை தும்பிக்கையால் வளைத்து பிடித்து தூக்கி வீசியது.
மேலும், கால்களால் போட்டு மிதித்து நசுக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எனவே, அந்த யானையை இனிமேல் யாரும் விரட்ட வேண்டாம் என்றும் காட்டில் சுற்றித்திரியும் போது பிடித்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்த வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு அகன்றுச்சென்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment