டெல்லி மாணவி குற்றவாளியை நானே கொல்வேன் நடிகை டாப்சி ஆவேசம்
கடவுள் என்னை அனுமதித்தால், கற்பழிப்பு குற்றவாளியை நானே கொலை செய்வேன் என்று நடிகை டாப்சி கூறி உள்ளார்.
கற்பழிப்பு குற்றவாளி பேட்டி
டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஸ் டிரைவர் முகேஷ் சிங், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அந்த மாணவி குறித்த ஆவண படத்துக்காக லண்டனைச் சேர்ந்த பி.பி.சி.–4 குழுவினர் முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து அதை ஒளிபரப்பினார்கள்.
நடிகை டாப்சி ஆவேசம்
கற்பழிப்பு குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி நடிகை டாப்சிக்கு மிகுந்த ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அவர் கூறியதாவது:–
கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால், நானே அந்த கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.
குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது..
0 கருத்துகள்:
Post a Comment