ஒடிசாவில் பள்ளி மாணவியின் கர்ப்பத்தை, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்காத பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலம் கோராபட் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு மாவட்ட மருத்துவமனையில் குழந்தை பிறந்த சம்பவம் ஜனவரி 24ம் தேதி வெளியே தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசாரிடம் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மாணவி பள்ளியில் படித்த மாணவரிடம் தொடர்பில் இருந்ததாக அதில் தெரிவித்து இருந்தனர். இச்சம்பவம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த சனிக்கிழமையே தெரியவந்தது.
மாணவி கர்ப்பமாக இருந்த விவகாரம் பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் வார்டனுக்கு தெரியும். அவர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து அலட்சியம் காரணமாக தலைமை ஆசிரியர் பிபுதி சதாபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளி விடுதியின் வார்டன் ரானு பெகேராவிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, அவரிடம் இருந்து பதில்வந்ததை அடுத்து தேவையான நடவடிக்கையை எடுப்போம். என்று மாவட்ட கலெக்டர் யாமினி சாரங்கி தெரிவித்து உள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வார்ட்ன் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி அளித்து உள்ளனர். இதற்கிடையே பள்ளியில் மாணவியுடன் சுற்றிய மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிராமத்தை சேர்ந்த மாணவி பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரையில் படித்துள்ளார். இதற்கிடையே மாணவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்த பின்னரே, மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிறக்கு தெரியவரும் என்று மற்றொரு மாவட்ட அதிகாரி தெரிவித்து உள்ளார். மாணவி மாவட்ட மருத்துவமனையில் போலியான பெயரில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு ஜனவரி 24-ம் தேதி குழந்தை பிறந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவி குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், அவருடைய பெற்றோர்களுடன் அனுப்பி உள்ளனர்.
ஒடிசாவில் இதுபோன்ற வழக்குகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. காந்துல்பேடா பகுதியில் கடந்த வியாழக்கிழமை 15-வயது மாணவிக்கு பள்ளியில் (SC, ST மாணவர்களுக்கு குடியிருப்பு பள்ளி) குழந்தை பிறந்தது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி மருத்துவமனையில் பள்ளியில் (SC, ST மாணவர்களுக்கு குடியிருப்பு பள்ளி) ஆறாம் வகுப்பு படித்த 12-வயது மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment