செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது.
செல்போன்
மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலான கருத்து உள்ளது.
செல்போன் பேசும் போதும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் மனித சமுதாயத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சி
செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து இதுபற்றி ஆராய்ச்சி நடத்தியது. இந்த ஆராய்ச்சி முடிவில் செல்போன் பேசுவதாலும், செல்போன் கோபுரங்களாலும் மனிதர்களுக்கு நோய் பற்றி மருத்துவரீதியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்து உள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு இந்த அமைப்புகள் அறிக்கை அளித்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பு இதுதொடர்பாக கடந்த 2000 முதல் 2011 மே 31–ந் தேதி வரை நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவலை உறுதி செய்து உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லை
செல்போன் பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதனை பயன்படுத்தும்போது சுகாதார சீர்கேட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 5 முக்கிய மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன. இதனால் செல்போன் மற்றும் கோபுரங்களில் இருந்து வெளிவரும் மின் காந்த அலைகள் மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.
கதிர்வீச்சு மற்றும் மின் காந்த அலைகளால் மனிதனுக்கு இதய கோளாறு, மலட்டு தன்மை, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகிறதா என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேலும் சில ஆய்வுகளை நடத்த உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment