தமிழகத்தில் ரூ. 94.72 கோடி மதிப்பிலான சேவைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாட்டம் உதகமண்டலம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவை தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனைகளில் ரூ. 3 கோடியே 90 லட்சம் செலவில் சி.டி.ஸ்கேன் கருவிகள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி 44 லட்சம் செலவில் நவீன மைக்ரோஸ்கோப் கருவி ஆகியவற்றின் சேவையும் தொடங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம்:
திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேனி, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர் ஈரோடு, அரியலூர், வேலூர், கோவை, தருபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 6. 48 கோடி மதிப்பில் கட்டடங்கள், 44 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 7 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் செவிலியர் குடியிருப்புகள், 17 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.14 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டடங்கள், 28 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 6 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டடங்கள், 5 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டடங்கள், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்துக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மகளிர், குழந்தைகள் நல திறன் மேம்பாட்டுக் கூடம், தேனி மாவட்டம் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் ரூ.11 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தேர்வுக்கூடம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான விடுதிக் கட்டடம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 55 லட்சம் செலவில் நுண்கிருமியியல் ஆய்வுக்கூடம், பலதுறை ஆராய்ச்சி நிலையக் கட்டடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இதுதவிர, செய்யார், விருதாச்சலம், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி, மயிலாடுதுறை, தாராபுரம், பல்லடம், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரூ.17 கோடியே 74 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்டப் பிரிவுகள், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இயல்கூடக் கட்டடடம் என மொத்தம் ரூ. 80 கோடியே 92 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார்.
ஆம்புலன்ஸ்
இதுதவிர ரூ. 3 கோடியே 46 லட்சம் செலவில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார். இதில் 13 பச்சிளங்குழந்தைகள் ஆம்புலன்ஸ், 4 மலைப்பகுதி, கடற்கரை பகுதிகளில் பயணிக்கும் ஆம்புலன்ஸ், 8 சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடங்கும்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ஞானதேசிகள், அரசு ஆலோசகர் டி.பி.பூனாட்சி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment