இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில் பேரூந்து சேவை உடன்பாடு செய்துக்கொள்ளப்பட்ட நிகழ்வில் இந்த தகவலை,
இந்திய மத்திய வீதிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான வீதி அமைப்பை பாக்கு நீரிணையின் ஊடாக பாலம் அமைப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். அத்துடன் கடலுக்கடி சுரங்கம் மூலம் மேற்கொள்ளமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கையின் எல்லைக்கும் இடையில் 23 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
பாம்பன் நகரில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு 29 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
இந்தநிலையில், குறித்த பேரூந்து மற்றும் ரயில் சேவைகளுக்கான திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்புதலுக்காக
வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்மாண நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபா தேவையென்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment