Search This Blog n

26 June 2016

அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் 4 உடல்கள் மீட்பு!

இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சின்ராஜ் என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம்
 வீசியுள்ளது. 
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சின்ராஜின் வீட்டின்‌ ஜன்னல் வழியாக ‌உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அழுகிய நிலையில் 4 உடல்கள் கிடப்பது கண்டு, அதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து அங்கிருந்த உடல்களை மீட்டு ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். 
மீட்கப்பட்ட சடலங்கள் சின்னராஜின் மனைவி பாண்டியம்மாள் (38) ,பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தலைமறைவாகியுள்ள சின்ராஜை ‌தேடி 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment