குற்றாலத்தில் அருவிகள் நீர் இன்றி காய்ந்து கிடக்கையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஒரேயொரு அம்மன் சிலைக்கு மட்டும் நீர் வருவது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது வழக்கம். ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.
இக்காலங்கள் போக ஜனவரி இறுதி முதல் மே மாதம் வரை அருவிகளில் தண்ணீர் வறண்டு போகும். தற்போது நீர் வறண்டு குற்றாலம் மெயின் அருவிகாட்சியளிக்கிறது. அருவியின் அனைத்து பகுதிகளும் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரின்றி காய்ந்து
கிடக்கிறது.
இந்நிலையில் அருவிகொட்டும் பாறையில் முன்னோர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மீது தண்ணீர் கொட்டி நீராடும் சுற்றுலாப் பயணிகள் மீதும் தண்ணீர் விழுவது ஐதிகமானது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அருவி வறண்டுள்ளது. ஆனால் அருவியின் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சிலைக்கு மட்டும் அதாவது “நிகம்பசூதனி அம்மன்” சிலைக்கு மட்டும் நீர் வருகிறது.
பாறைகளில் நீர்கசிவு உருவாகி அம்மன் சிலையை குளிர்வித்து வருகிறது. பாறை ஊற்று வழியாக மிகச் சரியாக இடைவிடாது நிகம்பசூதனி அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும் காட்சி பக்தர்களை அதிசயத்தில் ஆழத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment