Search This Blog n

01 June 2016

மோடி. சுவிட்சர்லாந்து செல்கிறார் கருப்புப்பணத்தை மீட்பாரா?


பிரதமர் மோடி  வரும் 4ஆம் தேதி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணமாகிறார். முதலில் ஆப்கானிஸ்தான், கத்தார் நாடுகளுக்குச் செல்லும் மோடி 
அங்கிருந்து
 ஸ்விட்சர்லாந்து செல்கிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார்.  பயணத்தின்போது மோடி கருப்புப்பணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் 15 இலட்சம் பணத்தை பகிர்ந்தளிப்போம்’ என்று தேர்தலுக்கு  முன்பு அறிவித்திருந்தார் மோடி. பிறகு, 
ஆட்சிக்கு வந்த
 சில மாதங்களில்,  ‘அது தேர்தலுக்குச் சொல்லப்பட்ட தந்திரம்’ என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடுவும் அது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடி சுவிட்சர்லாந்து பயணம் போவது பரபரப்பை
 ஏற்படுத்தியிருக்கிறது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment