ராகுல்காந்திக்கு உதவியாக ப்ரியங்கா காந்தியை களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
தேசிய கட்சியான பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதன் பயனாக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.
நரேந்திர மோடியின் செல்வாக்கால் காங்கிரஸ் மிரண்டு போனது. இதனால் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் இதை எதிர்பார்த்தனர்.
ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
ராகுல்காந்தி தலைமையிலான தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் குலாம் நபி ஆசாத், ஜோகிர் ஆதித்ய சிந்தியா, நந்தீப் சூரஜ்வாலா ஆகிய 3 பேர் மேலும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பலவீனமாக காணப்படும் கட்சியை பலப்படுத்த பிரியங்கா காந்தியை தேர்தல் பிரசாரத்தில் களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.
ராகுல்காந்திக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் வகையில் அவரை தேர்தல் களத்தில் கொண்டு வருகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தி மாநில வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் பிரியங்காகாந்தி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு ராகுலுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதே போல வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்பட பல்வேறு வகைகளிலும் ராகுல்காந்திக்கு அவர் உதவிகரமாக இருப்பார்.
0 கருத்துகள்:
Post a Comment