Search This Blog n

26 October 2014

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் ..

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த 18–ந்தேதியன்று தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தமட்டில் நேற்று வானம் பிரகாசமாக காணப்பட்டது. மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி காலையிலிருந்து வெயில் அடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர தாழ்வு மண்டலம்
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர தாழ்வு மண்டலமாக மாறி ஓமன் நாட்டின் சலாலா நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்காக சுமார் 950 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 72 மணி நேரத்தில் ஓமன், ஏமன் நாட்டு கடலோர பகுதிகள் வழியாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.
மழை பெய்யும்
குமரி பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment