Search This Blog n

17 October 2014

கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், சென்னையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிமுக 43வது தொடக்கவிழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, அமைச்சர்கள், நிர்வாகிகள் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். எனினும், ஜெயலலிதா சிறையில் இருந்ததால் உற்சாகமில்லாமல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் உச்சநீதிமன்றம்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. அப்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்ற தகவல் வெளியானதும், அதிமுக நிர்வாகிகள் கொட்டும் மழையில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதிமுக தொண்டர் ஒருவர் கட்சி அலுவலகத்தில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு சாக்லெட் அபிஷேகம் செய்தார்.

விழாவிற்கு கறுப்புசட்டை அணிந்து வந்த தொண்டர்கள் சட்டையை கழற்றி வீசினர். இதற்கிடையில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, தங்கமணி, மோகன் உள்ளிட்டோர் தலைமை அலுவலகம் வந்தனர். இன்று பிற்பகல் அனைத்து அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் பெங்களூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பெங்களூர் சிறை அருகேகொண்டாட்டம்சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், அவர் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஜெ.வுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
சிவகங்கை சட்டபேரவை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.முருகானந்தம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள், திருச்சி மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகி ஜெயராமன், மதுரை மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகி சுந்தரபாண்டியன், கர்நாடக மாநில அதிமுக வக்கீல் பிரிவு செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக வக்கீல்கள் சிறை முகப்பு வாயிலில் ஜெயலலிதா வாழ்க என்று முழக்கம் எழுப்பினர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். பரப்பனஅக்ரஹார பகுதி முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment