Search This Blog n

07 October 2014

மக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்

 கோயம்பேட்டியில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி, ஏழைகளுக்கு குர்பானி வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு தமிழ்நாடு தரம் கெட்டு போய் கிடக்கிறது. சட்டசபையில் குலுங்க குலுங்க சிரித்தவர்களை பார்த்து, உலகமே சிரிக்கிறது. தமிழக மக்களை கேவலப்படுத்தி விட்டார்கள். தமிழகத்தின் பெயரை சொன்னாலே சிரிக்கிறார்கள். அந்த அளவிற்கு மாற்றி இருக்கிறார்கள்.
மாவட்டத்துக்கு மாவட்டம் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போட்டவர்கள். இப்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை தடுக்க ஏன் 144 தடை உத்தரவு போடவில்லை. ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள்.
1997-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர்கள் கட்சி தொண்டர்கள் எங்கே போனார்கள்? இப்போது ஆளுங்கட்சி என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி அட்டகாசம் செய்வது ஏன்? பஸ்களை ஏன் நிறுத்துகிறீர்கள். பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்து, பொதுவுடமையை சேதப்படுத்தினால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
எனக்கு மடியில் கணம் இல்லை, அதனால் பயமும் எனக்கு இல்லை. அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், 10 ஆண்டுகள் அவர்களால் தேர்தலில் நிற்க முடியாது.
இந்த மகத்தான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். தங்களுக்கு சாதகமாக இருந்தால் கோர்ட்டை மதிப்பதும், எதிராக இருந்தால் எதிர்ப்பதும் தான் சட்டத்தை மதிக்கும் செயலா?
தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற நினைப்பு யாருக்கும் வரக்கூடாது. இப்போது முதல்-அமைச்சராக இருப்பவர், எப்போதும் முழு மூச்சாக தங்கள் தலைவி பற்றியே சிந்தித்துக்கொண்டே இருக்க கூடாது. மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், பிரேமலதா விஜயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment