Search This Blog n

30 October 2014

தணிக்கையாளர் அறிக்கைகளை பரபரப்பு ஆக்கக் கூடாது:

டெல்லியில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கணக்கு தணிக்கையாளர் என்பவர் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அதை நாம் ஆய்வு செய்கிறோம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை பார்க்க வேண்டும். தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கைகளை பரபரப்பாக்க கூடாது. தலைப்பு செய்திகளில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வரவும் கூடாது.
கணக்கு தணிக்கையாளர் செயல்படுகிற கணக்கு தணிக்கையாளராக இருக்க வேண்டும். ஆனால், செயல்பாடு என்பதும் கட்டுப்பாடு என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். முடிவு எடுக்கும் செயல்பாடுகளை அவர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வேண்டிவர்களுக்கு சலுகை காட்டுகிற வாய்ப்பினை ஒழித்துக் கட்ட வேண்டும்.
தணிக்கையாளர் என்பவர் தவறான முடிவையும், ஊழலையும் வேறுபடுத்தி பார்க்க தகுந்தவராக இருக்க வேண்டும். எடுக்கப்பட்ட ஒரு முடிவில் ஊழல் நடந்துள்ளது என கண்டால், அதை அவர் விமர்சிப்பது என்பது முற்றிலும் மாறுபட்டது.
பல்வேறு கருத்துக்களை எதிர்கொள்ளுகிறபோது, அவர் தாராளமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் நாம் உணர்ச்சிவயப்படுகிற மனோநிலையை கொண்ட சமூகத்தில், அதிகளவில் சந்தேகம் கொள்ளுகிற சமூகத்தில் வாழுகிறோம். பொதுமக்களின் கருத்தினை அப்படியே ஒருவிதமான விசாரணையற்ற முடிவாக மாற்றி விடக்கூடாது.
பொறுப்பினை சுமத்துவதற்கும், வெளிப்படையான நிர்வாகத்திற்கும் கணக்கு தணிக்கை மிகவும் முக்கியம். நல்ல நிர்வாகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சில நேரங்களில் பிரச்சினைக்குரிய கேள்விகளை எழுப்பாவிட்டாலும், ஆட்சி முறை சர்வாதிகாரத்தின் பக்கம் சாய்ந்து விடும். எனவே எந்த முறையிலான ஆளுகையிலும், பொறுப்பேற்க வைக்கும் சட்டங்கள் இருக்க வேண்டும்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment