This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

06 December 2016

கண்ணீர் அஞ்சலி திமுக சார்பில் வீரமங்கையே உனக்கு ஈடாகுமா.!

பல முறை தன் அரசியல் எதிரியான திமுகவை தோற்கடித்த ஜெயலலிதா தனது இறப்பிலும் எதிரியை வென்றுவிட்டார் . ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொண்டர்கள் மனம் வருந்தி பேனர் வைத்துள்ளனர். திமுகவினர் மனதையும் வென்ற ஜெயலலிதாவின் மரணம் யாராலும்
 மறக்க முடியாதது. 
இதோ ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினரின் கண்ணீர் அஞ்சலி ....
நீயில்லையே........ 
தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே...... 
ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன்  நின்றாலும்
 வீரமங்கையே உனக்கு ஈடாகுமா..
இனி எங்கள் தளபதி போட்டி மேடைக்கு வீரர்களை எங்கு தேடுவார்.....
உன்னை தேர்தல் களத்தில் ஒரு வீரமங்கையாய் எதிர்த்தோமே அன்றி...  
தலைவரின் உள்ளத்திலும் தளபதியின் உள்ளத்திலும் நீ நீடுலிவாழவேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை....  
இனி நாங்கள் எங்களின் சரியான எதிரியை எங்கு போய் தேடுவோம்..... 
நீயில்லாமல் கவலையின் உச்சத்தில்.
--- தி மு கழகம்----
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பொதுமக்களின் பார்வைக்குமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது

ஜெயலலிதா உடல் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலை நோக்கி கிளம்பியது -போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா உடல் புறப்பட்டது -பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது -சாலைகளின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி -ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வருவதாக தகவல் -பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல் -முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் -இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டது -அமெரிக்க அரசு -ஜெ. மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் குவிப்பு
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை வருகை -ஜெயலலிதா உடல் வைக்கப்பட உள்ள ராஜாஜி ஹால் பகுதியில் இப்போதே தொண்டர்கள் குவிந்தனர் -ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது -ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர் -பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிப்பு -குடும்ப முறைப்படி ஜெயலலிதா உடலுக்கு செய்த சடங்குகள் முடிவடைந்தன -போயஸ் கார்டனிலிருந்து
 ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட உள்ளது -ஜெயலலிதா மறைவு.. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை -மறைந்த ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் -ஜெயலலிதா அதிமுக தொண்டர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருப்பார்: கருணாநிதி 
-போயஸ்  கார்டனில் ஜெயலலிதா உடல்
 வைக்கப்பட்டுள்ளது -போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன -இறுதிச்சடங்கு பின்னர் ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்படுகிறது -போயஸ் கார்டனில் தொண்டர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு -எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டிஜிபி ஆய்வு -ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது -எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





05 December 2016

ஜெயலலிதாவின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கதறி அழுத தொண்டர்கள்.. கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின்
 கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ 
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாடகமாடியது அப்பலோ! தமிழச்சி சொன்னது உண்மை?வெளிவரும் ஆதாரங்கள்!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி , பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.
அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.
தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை
 வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்…
ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் “அம்மா உயிரோடுதான் இருக்கிறார்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!” என்று தெரிவித்திருந்தார் இன்று அவர் கூறியது போலவே ஜெயலிலதா இறந்துவிட்டார்.
மத்திய அரசின் சூழ்ச்சிக்கு துணைப்போன அப்பலோவின் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியுள்ளன.
இருப்பினும் தற்போது தமிழக முதல்வர்  இறந்துவிட்டதனை கேள்விப்பட்டு கொந்தழிக்கின்ற தமிழகத்தின் நிலையை பார்த்து மீண்டும் அப்பலோ போலியான அறிக்கைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. அதாவது தமிழக முதல்வர் இறந்துவிட்டதாக வந்த தகவல் பொய் என்று.
அதனை காட்டும் ஆதாரம்..
ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்  தமிழச்சி ஜெயித்துவிட்டார் ..ஜெயலிலதா இறந்துவிட்டார்..
 இனி தமிழகத்தின் கதி?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

முதல்வர் ஜெயலலிதா மரணம் ; சென்னையில் பதற்றம்

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் கழித்து 
இன்று மரணமடைந்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

விரைவில் கருணாநிதி அரசியல் களத்துக்கு திரும்புவார்பு

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து அரசியல் களத்துக்கு திரும்புவார் என புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக பேட்டியளித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார்.
கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: -
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி கனிமொழியிடம் கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். கருணாநிதி அன்றாடம் அரசியல் நிகழ்வில் இருக்க கூடியவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிக்கு விரைவில் திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
 தொல்.திருமாவளவன் , நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் நலம் 
விசாரித்தனர்.
அப்போது, திமுக முதண்மை செயலர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், அ.ராசா
 ஆகியோர் உடனிருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



04 December 2016

போடப்பட்ட தையலை பிரிக்க சென்றார்.தாய்க்கு நேர்ந்த அவலம்!

தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல வருடங்களாக குழந்தையில்லாமல் இந்த தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமலா கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக கடந்த 23ஆம் திகதி திருவாரூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கமலா சேர்க்கப்பட்டார். பின்னர் 25ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்‌ பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஒரு வாரம் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த கமலா குழந்தையுடன் தன் வீட்டிற்கு திரும்பினார்.
அதன் பின்னர் தன் உடலில் அறுவை சிகிச்சை செய்த போது போடப்பட்ட தையலை பிரிக்க மீண்டும் அதே மருத்துவமனைக்கு கமலா ஒரு வாரம் கழித்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் அளவில் அவர் தளர்ந்திருப்பதாக கூறி ரத்தம் செலுத்தினார்கள், அதன் பின்னர் கமலா கண்விழிக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக 
கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சையடைந்த கமலாவின் கணவர் நாகராஜனும் அவர் உறவினர்களும் மருத்துவர்கள் ரத்த வகையை கமலாவுக்கு மாற்றி ஏற்றியதால் தான் அவர் கோமாவுக்கு சென்று விட்டார் என கூறி மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டம் 
நடத்தினார்கள்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>