Search This Blog n

22 July 2013

மீண்டும் கனமழை: 152 பேர் பலி - 5 லட்சம் பேர் தவிப்பு



உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
ஷர்தா, காக்ரா, ராம்கங்கா, கங்கை, யமுனை, பெட்வா, கெய்ன், கோமதி, சாய், சராயு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோமதி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சீதாபூர், லக்னோ, சுல்தான்பூர் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சராயு ஆற்றின் வெள்ளப்பெருக்கில் பய்சாபாத், கோரக்பூர், பஸ்தி, குஷிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களும் கோமதி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் ரேபரேலி பகுதியின் பல கிராமங்களும் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன.
15 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பயிர்கள் முற்றிலுமாக நாசமடைந்தன.
சுமார் 5 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடும் மழையின் விளைவாக வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்து விழுந்தும், மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கியும் இதுவரை 152 பேர் பலியாகியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
{காணொளி, }

0 கருத்துகள்:

Post a Comment