Search This Blog n

03 July 2013

முலாயம் குறித்து பெனி மீண்டும் சர்ச்சை


 சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், பிரதமராக ஆசைபடுவதற்கு முன், பிரதமர் வீட்டு துப்புரவாளராக முயற்சிக்கட்டும்,'' எனக் கூறி மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார்.
 
 உ.பி.,யில், வரும் லோக்சபா தேர்தலில், 40 இடங்களை பெற்றுவிட்டால், முலாயம் சிங்கை பிரதமராக்கிவிடலாம் என, சமாஜ்வாதி கட்சியினர் கனவு கண்டு வருகின்றனர். இதை எதிர்ப்பார்த்து தான், மகனை முதல்வராக்கிவிட்டு, முலாயம் காத்திருக்கிறார் என, பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன.முலாயம் சிங்கிற்கு, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜிடம் இருந்து தான் அதிக கண்டனங்கள் எழும். ஆனால், மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ள, முலாயம் சிங்கிற்கு, சமீப காலமாக காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கிண்டலும், கேலியும் வருகிறது. இதற்கு காரண கர்த்தாவாக இருப்பவர், மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா. இவர் போகும் இடமெல்லாம், முலாயமை வம்பு இழுக்க தவறுவதில்லை.பிரதமர் கனவில் இருக்கும், முலாயமை கடுமையாக தாக்கி பேசிவருகிறார். இதை பார்த்து, சமாஜ்வாதி தொண்டர்களும், பெனி பிரசாத் வர்மாவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று பைசாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெனி பிரசாத் வர்மா கூறியதாவது:பிரதமராவதற்கு விரும்பும் முலாயம் சிங், முதலில் பிரதமர் வீட்டில் துப்புரவாளராக பணியாற்றுவதற்கு முயற்சிக்கட்டும். சமாஜ்வாதி கட்சி முறைகேடு, பொய்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது. இக்கட்சியை, காங்கிரஸ் ஒழித்து கட்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பெனி பிரசாத் வர்மாவின் பேச்சை ஏற்க முடியாது என, காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது

 

0 கருத்துகள்:

Post a Comment