Search This Blog n

03 July 2013

கூட்டணியை பலப்படுத்தும் காங்கிரஸ்: ஜே.‌எம்.எம்., கட்சிக்கு


 வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா ‌தேர்தலில் மீண்டும்ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமை கட்சியான காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜார்கண்‌ட் மாநிலத்தில் ஜே.எம்.எம். கட்சி்யுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுதர முன்வந்துள்ளது
   ஜார்கண்ட்டில் தேர்தல் :
   ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அர்ஜூன் முண்டா முதல்வராக பதவி வகித்துவந்தார். பா.ஜ., ஆட்சிக்குஆதரவு அளித்து வந்த ‌ஜார்கண்ட் முக்திமோர்சா கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து மாநிலத்தில் ஜனவரி மாதம் 18-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  காங்கிரஸ்-‌ஜே.எம்.எம். கூட்டணி :
   பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றில் சிக்கி தவித்து வரும் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் கூட்டணி பலத்தை உயர்த்த முடி வு செய்துள்ளது. இதனடிப்படையில் கடந்த மாதத்தில் தேசிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு தன்னுடைய ஆதரவை காங்கிரஸ் அளித்தது. தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் இது போன்ற தொருமுடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.
  இதற்காக மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள ‌ சட்டசபைக்ககான தேர்தலில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி மாநிலத்தில் முதல்வர் பதவியை ஜே.எம்.எம்., கட்சியை சேர்ந்த ஹேமந்‌த் சோரனுக்கு அளிக்க முன்வந்துள்ளது. அதே போல் மாநிலத்தில் உள்ள 14 லோக்சபா தொகுதிகளில் ஒன்பது முதல பத்து இடங்கள் வரை போட்டி போட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
  பேச்சுவார்த்தை:
   கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜே.எம்.எம்.கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் மற்றும் கட்சியி்ன மூத்த தலைவர்கள் ராஞ்சியிலிருந்து புறப்பட்டு புதுடில்லி வந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்களான ஏ.கே. அந்தோணி, அகமதுபடேல், உட்பட பார்லி தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  கடந்த 2004-ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மேற்கண்ட இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆறு இடங்கிளலும், ஜே.எம்.எம்.கட்சி நான்கு இடங்களிலும் வென்றது பிற கட்சிகள் மீதமுள்ள இடங்‌களை கைப்பற்றியது. 2009-ல் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு உறுப்பினராக சுபோத் கான் சகாய் என்பவரை மட்டுமே பெற்றுள்ளது.

 இந்நிலையில் காங்கிரஸ் உடன் லாலுவின் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் இணையும் பட்சத்தில் காங்கிரஸ் தன்னுடைய லோக்சபா தொகுதகளில் இருந்து ஒன்றிரண்டு தொகுதியை விட்டுத்தரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

Post a Comment