This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

27 December 2020

புரட்டியெடுக்குமா இந்தியா 195 ஓட்டங்களுடன் சுருண்டது அவுஸ்;

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 26-12-20-அன்று மெல்பேர்னில் ஆரம்பமாகியது.போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3) விக்கெட்களை வீழ்த்தினர்.இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும்...

23 December 2020

ஐதராபாத்தில் கொரோனா சோதனை. தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார்.நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர்...

15 December 2020

இலங்கையில் மீன்வளத்தை அள்ளவந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின் மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை தீர்மானம்...

06 November 2020

திரைப்படத்தை மிஞ்சும் மெய்சிலிர்க்கும் மரம் விட்டு மரம் தாவும் பனையேறி

தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றதுதமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன்...

02 November 2020

டும்.டும்.டும் ,பிரபல நடிகை காஜலுக்கு .கெளதம் கிச்லு திருமணம்

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிச்லு திருமணம் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம்(30) நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

16 October 2020

இந்திய யாவில் 50 ஆயிரத்தை நோக்கி குறைந்து வரும் தினசரி பாதிப்புகள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 73 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில்...

09 October 2020

முசோரியில் கோர விபத்தால் அந்தரத்தில் தொங்கிய பேருந்து.

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம்  உயிரை உறைய வைத்த விபத்தின் திக் திக் நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.இந்தோ-திபெத் எல்லை அருகே பொலிஸார் பயணம் செய்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியுள்ளது.அதிர்ஷ்டவசமாக...

25 September 2020

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம். மருத்துவமனை அறிவிப்பு

 உலகப் புகழ்பெற்ற பாடகர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவர து மகன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு...

15 September 2020

ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் இப்படியும் நடக்கின்றது

கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா.இவருக்கு தற்போது 34 வயது. இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் அர்த்தம் கிரவுன் (Crown) அதாவது கிரீடம் என்பதாகும்தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். ஒரு சிலர் அவரை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும்,...

10 September 2020

பெண் குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது

 தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ (45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி (5) என்ற குழந்தை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்து விட்டார். இதையடுத்து ரொசாரியா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை, ஜெயராணியின்...

06 September 2020

கோதாவரி மாவட்டத்தில் திடீரெனத்தீப்பற்றியெரிந்த ஆலயத் தேர்

                                    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆலயத் தேர் நள்ளிரில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு சொந்தமான தேர், ஆலய வளாகத்திலுள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

05 September 2020

எஸ்.பி.பாலா தமது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்

 இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,04-09-20. வெள்ளிக்கிழமை. அன்று தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு.04-09-20 அன்று  திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக...

15 August 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி....

13 August 2020

சென்னையில் தன்னந்தனியாக 23வது மாடியின் வெளிப்புற விளிம்பில் சுற்றிய சிறுமி

 சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 23ஆவது மாடியின் விளிம்பில் 15 வயது சிறுமி சுற்றி வந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சிறுமியை எதிரில் உள்ள குடியிருப்புவாசிகள் காணொளி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இளம் கன்று பயமறியாது என்பார்கள். மேலும் ஓடும் பாம்பை பிடிக்கும் வயசு என்றும் சிறுவர்கள், சிறுமிகளின் துணிச்சலை ஒப்பிடுவது உண்டு. அந்த வகையில் குழந்தைகள் பாம்புடன் விளையாடுவது, நாயுடன் விளையாடுவது, பாம்பை பிடிப்பது...

23 July 2020

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுனர் முடிவெடுக்காமைக்கு உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை  அனுபவித்து வருகின்றனர். 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இராஜீவ்...

ஆலங்குடியில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வசித்து வந்தவர் சதீஷ்குமார்(19). தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் சதீஸ்குமாரால் சமீபத்தில் இவரது வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சதீஷ்குமாரை மோசமாக  திட்டி அடித்துள்ளனர். இந்த நிலையில், மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை...

21 July 2020

இலங்கைக்குள் இந்தியாவிலிருந்து நுழைந்த பூனையினால் பேராபத்து

இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற  அச்சம் எழுந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 -07-20.ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.இவர்களுடன் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.அதனை  ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வர பேராதனை விலங்கு  உற்பத்தி...

16 July 2020

கொரோனாவினால் எதிர்வரும் செப்ரெம்பரில் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்களாம்

நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது. அதேநேரம் அதில்  10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக மஹராஷ்டிராவில் 6.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லியில் 2.4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும்,...

09 July 2020

.நண்பனை கோழிக்கடை நடத்தும் தகராறில் வெட்டிக் கொலை செய்த நண்பர்கள்.

கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை படுகொலை செய்துள்ளனர் வாலிபர்கள். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உதயா (30) என்பவர் அங்குள்ள சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார். கடந்த 4ம் திகதி இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு எதிர்ப்புறமுள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார் உதயா. 5ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதால் முழு ஊரடங்கு...

26 June 2020

தாஜ்மஹால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடுவதற்கு தீர்மாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு அதிகளவானவர்கள் வந்து செல்வது வழக்கமாகும். இதனால் அதிகளவானவர்கள் ஒன்று கூடும் போது நோய் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மார்ச் மாத இறுதிவரை தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

25 June 2020

பிகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் பலி

இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர்  உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு  அறிவிவித்துள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

09 June 2020

முசாபர்பூரில் இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தை

  ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது  உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு...

02 June 2020

கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற  மனைவியும், இரண்டும் மகன்களும்  மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய  அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம்...

30 May 2020

மனித பிழைகளுக்கான மறக்க முடியாத தண்டணை வயிரசும் வெட்டுக்கிளியும்

இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு.  ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது  எனலாம். ஏழாம் அறிவு,  காப்பான் என சூர்யாவை வைத்து மீம்கள் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இவை இரண்டாலும்...

27 May 2020

கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியத் தம்பதி

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வருகிறது.ஏறத்தாழ 56 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை எடுத்தும் பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 3½ லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது.  நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான...