This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

27 February 2019

இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் மூளும் ஆபத்து

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம்தற்போது டெல்லியை மையப்படுத்திய வான்பரப்பை இந்தியா அவசரமாக மூடும் சூழல் முதல் எல்லையில் இரண்டுதரப்பும் கடும் எறிகணைகளை வீசிவரும் நிலைமைவரை நகர்ந்துவிட்டது.இன்று இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானிய போர்விமானங்கள் பிரவேசித்ததையடுத்துஇந்தியத்தரப்பில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் ராணுவத்தினலும் எல்லைப்பாதுகாப்புப் படையினர், குவிக்கப்பட்டுவருகின்றனர்.
அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் உள்ள சகல பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுன. இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.இதற்கிடையே காஷ்மீர் ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக
 கூறப்படுகிறது.
இதற்குப்பதிலாக ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் முளில்நேற்று இரவு முதல் பாகிஸ்தானிய ராணுவம் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் இதற்குப்பதிலடியாக
 இந்திய ராணுவம்; 5 பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த 72 மணிநேரத்துக்குள் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அது இரண்டாம் உலகப்
போரைக் காட்டிலும், மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தானியத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் என பாகிஸ்தானியத் தரப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


20 February 2019

இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால் வீர மரணம் அடைந்தார் அவரது உடல் நேற்றைய டேராடூன் 
கொண்டு வரப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


04 February 2019

குழந்தைகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

<
மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சினையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது
 மனைவி அம்மு.இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால்
 பிரபு இறந்து விட்டார்.
இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை
 ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



03 January 2019

மன்னார் மீனவர்கள் இந்தியக் கடலில் மாயம் கரையொதுங்கிய ப் படகு …

தமிழகம், இராமேஸ்வரம் – சேரான்கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய படகு இலங்கை, மன்னார் – வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும்
 தெரிவிக்கும் போது;
இந்த படகில் நேற்று மாலை மீனவர்கள் இருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை படகு சேரான்கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.எனினும்,
 இதில் பயணித்த இரு மீனவர்களும் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் 
குறித்த இருவர் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மேலும், முடிந்தவரை இந்திய தமிழக மற்றும் மீனவர் தரப்பு, இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என கோரியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



21 November 2018

பெருங்கடலுடன் பல வருடங்களின் பின்னர் சங்கமித்த நந்திக்கடல்

முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை
 காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர் வழக்கமாக இருந்தது.இந்
த நிலையில், பல வருடங்களின் பின் இயற்கையாகவே 21.11.2018. அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
  அண்மைக்காலமாக முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழையால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இன்று நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>




20 November 2018

நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம்..? பெரும் அச்சத்தில் மீனவர்கள்

நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம் கடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – 
வட்டுவாகல் பகுதியில், இன்று காலை, தூண்டில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டில் அதி உயர் மின்கம்பியில் சிக்கியுள்ளது.இவ்வாறு சிக்கிய தூண்டிலின் தங்கூசி நூல் அதி உயர் மின்கம்பியில் சிக்கி நந்திக்கடல் நீருடன் தொட
ர்புபட்டுள்ளது.  இதனால், தூண்டில் நூலில் ஏற்படும் ஈரத்தன்மையூடாக அதி உயர் மின்சாரம் நந்திக்கடலில் கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




16 November 2018

ஆறு மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் வாகனங்கள் இயக்க தடை

சென்னை (13 நவ 2018): கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் சென்னைக்கு 
வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை 
கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில்
 தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும். தற்போது நிலவரப்படி 
14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த 
காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் 
உயரும். மிக கனமழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை 
பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும். பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
 இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும் நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை கடக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க, நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க
 முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும் அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்க தொடங்கும். பகல் 12 மணி அளவில் கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். இந்த புயலின் தாக்கத்தால் சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை என்றாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறும்போது, ‘மழை பாதிப்பு குறித்து விரைந்து அறிந்து கொள்ள டி.என்.ஸ்மார்ட் என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதையை சூழ்நிலையில் 4,400 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்று
 தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே, கஜா புயலை எதிர்கொள்வது குறித்தும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கும் மக்களை உடனடியாக மீட்பது, தற்காலிக தங்கும் இடங்களை உருவாக்குவது, தீயணைப்பு
 வாகனங்களை தகுந்த இடங்களில் நிறுத்துவது, முக்கியமான இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பது, பாதிப்பு மிகுந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரை அதிகமாக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று மாலை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்துரையாடினார். அப்போது அவர் கஜா புயல் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரைகள்
 வழங்கினார்.