Search This Blog n

09 May 2017

நாளை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு– சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரியில் பார்க்கலாம்

கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை நாளை காணலாம்.
சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை (புதன்கிழமை) கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும். ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. 
சுற்றுலா பயணிகள்      கூடுவார்கள்
கன்னியாகுமரியில் நாளை மாலை 6.32 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மறையும். அதே நேரத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் சந்திரன் நெருப்புப்பந்து போல 
மேலே எழும்பும்.
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்ப்பார்கள். இதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவார்கள். அவர்களுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. 

0 கருத்துகள்:

Post a Comment