Search This Blog n

17 February 2018

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொன்றாரா தாய்?

தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டரை மாத குழந்தையை கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் வெய்கால்பட்டி இந்திரா காலணியை சேர்ந்த
 சாத்தாகுட்டி- லட்சுமி தம்பதிக்கு, மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.லட்சுமி, தனது தாயாரின் வீட்டில் 
இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை தனது 2வது குழந்தையை, அதே பகுதியில் உள்ள தமது கணவரின் வீட்டில் விடுவதற்காக சென்றுள்ளார்.
குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து வந்து விட்ட நிலையில், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை மாத குழந்தையை காணவில்லை என கணவரிடம் தெரிவித்துள்ளார்.இருவரும் குழந்தையை தேடிய நிலையில் வீட்டின் பின்பக்கம் இருந்த தண்ணீர் 
தொட்டியில் குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கடையம் பொலிசார், தனது கணவருக்கு தன் நடத்தை மீது சந்தேகம் எழுந்து சண்டையிட்டதால், தாய் லட்சுமி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக வழக்கு பதிவு
 செய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

Post a Comment