Search This Blog n

22 May 2018

பொதுமக்கள் மீது பொலிஸ் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பத்துப் பேர் பலி! பலர் படுகாயம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில் 10பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய 2 துப்பாக்கிச் சூடுகளில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், “எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு” என்பதுதான்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

ஆனால், இதுகுறித்து தமிழக அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், போராட்டத்தை வீரியமடையச் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தினைக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவலர்களை கற்களை கொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதனால் பயந்துபோன காவல்துறை செய்வதறியாது திகைத்து போராட்டத்தினை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியது. தமிழக காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூட்டினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணிலே உரிமைக்காக போராடிய தமிழக மக்களை கொன்றொழிப்பதா என தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை. இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல்என்கிறார்கள் 
நெட்டிசன்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

Post a Comment