போதை பழக்கதிற்கு அடிமையான மகனை தந்தையே எரித்த கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் அறங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் தந்தை பாலசுப்பிரமணியுடன் தகராறும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் இரவு வழக்கம் போல
குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையுடன் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை மகன் மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த தந்தை பாலசுப்பிரமணி உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்றும் நள்ளிரவில் மணியின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளார்.பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அவர்கள் தந்தை பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment