சென்னை ஐஸ் ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 6 பேருக்கு.05-05-20, இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து வி.ஆர்.பிள்ளை தெருவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கொரோனா
வைரஸ் பரவும் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் சுமார் 1000ற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,04-05-20,.நேற்று உச்ச பட்சமாக ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாளானா ஞாயிற்றுக்கிழமை 203 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்தது.இந்நிலையில், சென்னையில் ஐஸ் ஹவுஸில் உள்ள
ஒற்றைத் தெருவில் மட்டும் 70 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தன்னார்வலர் ஒருவர் மூலம் பலருக்கும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஐஸ் ஹவுஸில் தன்னார்வலர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள காவலர்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு கடந்த வாரம் நல்லெண்ணத்துடன் டீ, பிஸ்கட் மற்றும் உணவு விநியோகித்தார். சமூக இடைவெளியை
பின்பற்றியதுடன், மாஸ்க் அணிந்த படி தான் உணவு கொடுத்துள்ளார்.ஆனால், அவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் இருமல் இருப்பது தெரியவந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தன்னார்வலருக்கு கொரோனா இருப்பதை
உறுதி செய்தனர். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த போலீசார், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை
நடத்தப்பட்டது.ஒரே தெருவில் பாதிப்புஅத்துடன் தன்னார்வலருடன் தொடர்பில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதன்பிறகு
வரிசையாக கொரோனா சங்கிலி தொடர்போல் பலருக்கும் பரவியது. இப்படி ஐஸ் ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் பலருக்கும் கொரோனா பரவி இருந்தது. இந்நிலையில் அந்த தெருவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த ஒற்றை தெருவில் 70 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சங்கிலி தொடராக பரவுகிறது.இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதி ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வி.ஆர்.பிள்ளை
தெருவில் உள்ள அனைவருக்கும், அவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் பரிசோதித்து வருகிறார்கள். எனவே சங்கிலி தொடர் எந்த அளவுக்கு சென்றது என்பது அடுத்தடுத்த
நாளில் தெரியவரும்.
0 கருத்துகள்:
Post a Comment