23 March 2019
திருச்சியில் உயிரிழந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்
தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பற்ற சென்ற போது அவருடைய கணவர் முருகேசனும்
தீக்காயமடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட சுமதி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனை அடுத்து, வேகமாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் சுமதி உயிருடன் இருப்பதை உறுதி செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுசம்மந்தமாக சுமதியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சமாதானம் செய்து வீட்டிற்கு
அனுப்பி வைத்தனர்
13 March 2019
கிளியை கண்டுபிடித்து தருபவருக்கு காத்திருக்கும் பரிசு
உத்தரப்பிரதேச முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தரப்படும் என்று அறிவித்திருப்பது
ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி
வளர்த்து வந்தார்.
நன்றாக பேசும் அந்த கிளிக்கு, மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.காணாமல் போன கிளியின் போட்டோ
‘வாட்ஸ் அப்’பில் வெளியிடப்பட்டது. நண்பர்கள்
மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எந்த தகவலும் இல்லை.
எனவே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிக்ஷாவில் ஒலி பெருக்கி கட்டி அதன் மூலம் மைக்கில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.இந்த கிளி குறித்து சனம் அலிகான் கூறும்போது, 1998-ம் ஆண்டு வெளியான மவுலி என்ற இந்தி படத்தின் பெயரை இதற்கு சூட்டினேன். அது கிளி பற்றிய படமாகும். நாங்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது அதை பராமரித்து வந்தவரின் கவனக்குறைவால் அது காணாமல் போய்விட்டது.
அது மிகவும் புத்திசாலி. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஸ்கைப் ஆக அதை பயன்படுத்தி வந்தோம். அதை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.சனம் அலிகானின் சகோதரர் சகாப்சதா சல்மான் அலிகான் கூறும்போது, கிளி காணாமல் போனது எங்கள்
குடும்பத்துக்கு பேரிழப்பு.
கிளி மித்துவை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தோம். அது மீண்டும் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி
அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
08 March 2019
தாயாருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய மகன்
புதுச்சேரியில் மரணப்படுக்கையில் உள்ள தாயாருக்காக ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய மகனுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டுமென உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த 53 வயது வாணி என்ற பெண்மணி சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணப்படுக்கையில் உள்ள அவருக்கு நெருங்கிய உறவினர்கள் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் பிழைக்க வாய்ப்புள்ளதாக
மருத்துவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவருடைய மகன் செந்தில்குமார் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். அதற்கு மருத்துவ அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட தனியார்
மருத்துவமனை, இதுதொடர்பாக உடல், உறுப்பு மாற்று அ
றுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் ஒப்புதலை கோரியது. அந்த ஒப்புதல் குழு, சம்பந்தப்பட்ட நபரின் மனைவி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரது சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும்
எனக்கூறி மறுத்தது.
இதையடுத்து செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் ‘மரணப்படுக்கையில் உள்ள எனது தாயாரைக் காப்பாற்ற உடனடியாக எனது சீறுநீரகத்தை தானம் செய்ய
வேண்டியுள்ளது.
தற்போது நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். ஆனால் மனைவியுடன் வாழ்கிறேன் எனக் கூறினால்தான் எனது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என நினைத்து
மனைவியுடன் வாழ்வதாக தெரிவித்தேன். தற்போது மனைவியின் ஒப்புதல் கோருகின்றனர். அது நடக்காத காரியம் என்பதால் எனது சிறுநீரகத்தை தாயாருக்கு தானம் செய்ய அனுமதியளிக்க சம்பந்தப்பட்ட குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்தது. அப்போது நீதிபதி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
அதைப் பார்த்த
கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.
அதையடுத்து நீதிபதி ‘இந்த வழக்கில் உடல் உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு, மனுதாரரிடம்
புதிதாக வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகத்தை தாயாருக்கு தானமாக அளிக்க அனுமதியளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். நீதிபதி கண்ணீர் விட்டு அழுததால், சிறிதுநேரம் நீதிமன்ற வளாகம் அமைதியானது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
27 February 2019
இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் மூளும் ஆபத்து
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம்தற்போது டெல்லியை மையப்படுத்திய வான்பரப்பை இந்தியா அவசரமாக மூடும் சூழல் முதல் எல்லையில் இரண்டுதரப்பும் கடும் எறிகணைகளை வீசிவரும் நிலைமைவரை நகர்ந்துவிட்டது.இன்று இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானிய போர்விமானங்கள் பிரவேசித்ததையடுத்துஇந்தியத்தரப்பில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் ராணுவத்தினலும் எல்லைப்பாதுகாப்புப் படையினர், குவிக்கப்பட்டுவருகின்றனர்.
அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் உள்ள சகல பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுன. இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.இதற்கிடையே காஷ்மீர் ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக
கூறப்படுகிறது.
இதற்குப்பதிலாக ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் முளில்நேற்று இரவு முதல் பாகிஸ்தானிய ராணுவம் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் இதற்குப்பதிலடியாக
இந்திய ராணுவம்; 5 பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த 72 மணிநேரத்துக்குள் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அது இரண்டாம் உலகப்
போரைக் காட்டிலும், மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தானியத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் என பாகிஸ்தானியத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 February 2019
இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால் வீர மரணம் அடைந்தார் அவரது உடல் நேற்றைய டேராடூன்
கொண்டு வரப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
04 February 2019
குழந்தைகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
<
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சினையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது
மனைவி அம்மு.இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால்
பிரபு இறந்து விட்டார்.
இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை
ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
03 January 2019
மன்னார் மீனவர்கள் இந்தியக் கடலில் மாயம் கரையொதுங்கிய ப் படகு …
தமிழகம், இராமேஸ்வரம் – சேரான்கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய படகு இலங்கை, மன்னார் – வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும்
தெரிவிக்கும் போது;
இந்த படகில் நேற்று மாலை மீனவர்கள் இருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை படகு சேரான்கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.எனினும்,
இதில் பயணித்த இரு மீனவர்களும் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில்
குறித்த இருவர் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மேலும், முடிந்தவரை இந்திய தமிழக மற்றும் மீனவர் தரப்பு, இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)


























