This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 December 2013

வடமாநிலங்களில் கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லி முழுவதும், கூடுதல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரியில் இருந்து.

 மேலும் உத்தரபிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் கடும் குளிர் நிலவயது.
இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் முடங்கிகிடந்தனர்.
 

28 December 2013

கூடங்குளம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர்  திட்டத்தினை

கூடங்குளம் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளுக்கான வளர்ச்சி  திட்டத்தின் கீழ்  செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவிற்காக 87 லட்சம் ரூபாய்  ஆகியவற்றிக்கு  நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு  55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்

ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் நாண்டேட் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாயினர். இதில் பலியாவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனக கார்கே அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

27 December 2013

குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மனைவி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக மேல்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மிகப்பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது குல்பர்க் என்னுமிடத்தில், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து ஜாகியா ஜாஃப்ரி புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் படையை (எஸ்.ஐ.டி.) உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அதனையடுத்து அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை ஆமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, சிறப்புப் புலனாய்வுப் படைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் படை அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், மோடி உள்பட குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் அச்சம்பவத்தில் தொடர்பில்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக் கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுப் படை தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து, வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.ஜே. கனத்ரா, ஜாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக மேல் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாகியா ஜாஃப்ரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை அறிந்ததும், அவர் கதறி அழுதார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) வழக்கறிஞர் ஆர்.எஸ். ஜாமுர்,
"சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்ததற்கு, ஜாகியா ஜாஃப்ரியின் மனுதான் தடையாக இருந்ததாகவும், தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும்" கூறினார்.

ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறப்புப் புலனாய்வுப் படை தலைவர் ராகவன், தனது குழுவினர் நடத்திய விசாரணை உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகவும் ராகவன் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, உண்மை வென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

 

சிறுமியை கடத்தி கற்பழித்த இளைஞன் கைது

சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதன்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது பெற்றோரிடம் கூறி,  குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது. 
கேரளாவில் ஆலப்புழையிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சிறுமியை துபாய்க்கு கடத்த திட்டமிட்டதாக ஹுமாயுன்நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டையுடன் வலம் வந்த முகமது முஸ்தபா பலரிடம் முறைகேடு செய்து பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ஐதராபாத் பொலிஸார் முல்லபள்ளி என்ற இடத்தில் கைது செய்தனர்.
 

தேவ்யானி கைது தொடர்பில் புதிய தகவல்: தொடரும் !!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவ்யானி கோப்ரகடே.

இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 12ம் திகதி தேவ்யானி கைது செய்யப்பட்டார். அவர் ஆடை களைந்து சோதனையிடப்பட்டார். இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு சில சலுகைகளை பறித்தது. இந்த மோதல் போக்கு விரைவில் தீரும் என்று இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தேவ்யானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக கடந்த ஓகஸ்ட் 26ம் திகதியிட்டு நியமிக்க இந்தியா சிபாரிசு செய்ததாக புதிய தகவல் தெரிய வந்துள்ளது.
அதனால், அவருக்கு ஐ.நா. தூதரக அதிகாரி அந்தஸ்து கிடைத்துள்ளது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘சட்ட பாதுகாப்பு’ கொண்ட பதவி ஆகும்.

எனவே, தேவ்யானி, தனது கைதின் போதே சட்ட பாதுகாப்பு பெற்றவராக இருந்தார். அதையும் மீறி, அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேவ்யானி, ஐ.நா. தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டது, எந்த விதத்திலும் இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாது. முன்தேதியிட்டு அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது’ என்று கூறினார்.
இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான மோதல் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
 

24 December 2013

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்

இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை இந்தியாவில் தொடர்வதற்கான புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.கலாச்சார உறவுகளுக்காக இந்தியப் பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 180 புலமைப்பரிசில்கள் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.  நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இளமாணிக் கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளியல், மனிதப் பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டத்தில் முதுமாணி கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளியல், மனித பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 50 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், இத்திட்டத்தில் பொறியியல், விஞ்ஞானம், மற்றும் விவசாய கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ரஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தில் தொழில்நுட்ப துறையில் பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்ப  இளமாணி பட்டம் ஆகிய இளமாணி பட்டங்களுக்கு 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணி மற்றும் கலாநிதி ஆய்வுக்கு 5 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இந்திய அரசு இந்தப் புலமைப்பரிசில்களுக்காக இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பயனாளிகளைத் தெரிவு செய்யவுள்ளது.  மிக உயர்ந்த திறமை கொண்ட நபர்களும், பல்கலைக்கழகங்களில் ஆய்வு உள்ளிட்ட உயர் கல்வி கற்பதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சினுடைய ஆலோசனைகளின் படி புலமைப்பரிசில் பெறும் நபர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

எல்லாப் புலமைப் பரிசில்களும் கல்விக் காலம் முழுமைக்குமான கல்விக் கட்டணத்துடன் செலவுப் படிகளை உள்ளடக்கியுள்ளது.  அத்துடன், தங்குமிடக் கொடுப்பனவுடன் புத்தகம் மற்றும் காகிதாதிக்கான ஒரு வருடக் கொடுப்பனவும் வழங்கப்படும். இவை தவிர இந்தியாவிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் அனைத்துப் புலமையாளர்களுக்கும் சிறு சிறு உதிரி

நன்மைகளுக்கு மேலாக முழுமையான சுகாதார வசதிகள், இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்திற்கான விமானப் பயணச்சீட்டு கட்டணம், நாட்டின் பல பாகங்களுக்கான கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும்.

இதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. உயர் கல்வி அமைச்சின் இணையத்தளமான றறற.அழாந.பழஎ.டம எனும் முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.