Search This Blog n

28 December 2013

கூடங்குளம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர்  திட்டத்தினை

கூடங்குளம் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளுக்கான வளர்ச்சி  திட்டத்தின் கீழ்  செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவிற்காக 87 லட்சம் ரூபாய்  ஆகியவற்றிக்கு  நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு  55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment