Search This Blog n

04 December 2013

திருப்பதி அருகே 2 போலீஸ்காரர்கள் கொலை


 திருப்பதி அருகே சித்தூர் மாவட்டத்தில், இரண்டு போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் செம்மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் சேர்ந்தவர்கள் வெட்டி கடத்தி அண்டை மாநிலங்களில் விற்றுவருகின்றனர்.

செம்மரகட்டை கடத்தலை தடுக்க வனத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனபகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

சித்தூர் அடுத்த பலமனேர் காட்டில் சோதனை நடத்துவதற்காக போலீசார் ஜவஹர்லால் நாயக் (வயது 23), ஊர்காவல் படையை சேர்ந்தவர். தேவா (22) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் சென்றனர்.
ஆனால் அவர்கள் திரும்பிவரவில்லை இதனால் இருவரையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பலமனேர் வனபகுதியில் மாடு மேய்க்க சென்ற சிலர் வனப்பகுதியில் காக்கி உடையில் 2 பிணம் கிடப்பதாக கூறினார். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு போலீஸ்காரர் ஜவஹர்லால் நாயக், ஊர்க்காவல் படை வீரர் தேவா கொலை செய்யபட்டு பிணமாக கிடப்பதை கண்டனர். ஜவஹர்லால் நாயக் உடலில் கத்திகுத்து காயங்கள் உள்ளது. பூட்ஸ் காலால் கழுத்தை மிதித்து உள்ளனர். தேவாவின் கழுத்து இறுக்கபட்டு இருந்தது.

இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஹரிநாத் ரெட்டி இன்ஸ்பெக்டர் பாலய்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சித்தூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
செம்மரகட்டை கடத்தலை தடுக்க முயன்ற போது போலீஸ்காரர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment