Search This Blog n

27 December 2013

தேவ்யானி கைது தொடர்பில் புதிய தகவல்: தொடரும் !!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவ்யானி கோப்ரகடே.

இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 12ம் திகதி தேவ்யானி கைது செய்யப்பட்டார். அவர் ஆடை களைந்து சோதனையிடப்பட்டார். இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு சில சலுகைகளை பறித்தது. இந்த மோதல் போக்கு விரைவில் தீரும் என்று இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தேவ்யானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக கடந்த ஓகஸ்ட் 26ம் திகதியிட்டு நியமிக்க இந்தியா சிபாரிசு செய்ததாக புதிய தகவல் தெரிய வந்துள்ளது.
அதனால், அவருக்கு ஐ.நா. தூதரக அதிகாரி அந்தஸ்து கிடைத்துள்ளது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘சட்ட பாதுகாப்பு’ கொண்ட பதவி ஆகும்.

எனவே, தேவ்யானி, தனது கைதின் போதே சட்ட பாதுகாப்பு பெற்றவராக இருந்தார். அதையும் மீறி, அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேவ்யானி, ஐ.நா. தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டது, எந்த விதத்திலும் இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாது. முன்தேதியிட்டு அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது’ என்று கூறினார்.
இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான மோதல் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment