இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 141 இந்திய மீனவர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
முல்லைத்தீவு,செம்மலை,அலம்பில் ஆகிய கடற்பகுதிகளில் வைத்து நேற்று காலை 15 படகில் வந்த 111 இந்நிய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இதில் 111 பேர் திருகோணமலையிலும் 30 பேர் காங்கேசன்துறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
இவர்கள் இன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment