பாஜகவினர் மிரட்டல் கடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க போகிறார்? தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பாஜக ஆட்சிக்கு வருமேயானால் பெரும் கலாச்சார சீரழிவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையம் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியினர் மோடியை விமர்சித்தனர்.
இந்த பரப்புரைக்கு பாஜகவினர் கடும்கண்டனம் தெரிவித்திருந்தனர். மோடியின் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் கேள்விகள் கேட்பதற்கு காங்கிரசில் உள்ள யாருக்குமே
தகுதி கிடையாது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் காங்கிரசார் மீண்டும் மீண்டும் மோடி திருமண விஷயத்தை பெரிது படுத்தவே இணையாதள பாஜகவினர் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தார் இதுவரை பெண்களை எந்த அளவிற்கு போக பொருளாய் பயன்படுத்தியுள்ளனர் என தினமும் புது புது தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment