Search This Blog n

31 August 2014

தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்கள்: வாய்ப்பு பெற்ற


   நெல்லை, மகளிரணி நிர்வாகிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக, அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகள் உள்ளிட்ட காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஆக. 28) தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலர் இ.புவனேஸ்வரி (40) போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். எம்.ஏ., எம்.பில். பயின்றுள்ள புவனேஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். கட்சியில் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலராக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேயர் வேட்பாளராகத் தேர்வு பெற்றுள்ளது குறித்து புவனேஸ்வரி கூறுகையில், ஏழைத் தொண்டனும் அ.தி.மு.க.வில் பெரிய வாய்ப்பைப் பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 1994ஆம் ஆண்டுமுதல் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக புவனேஸ்வரி பணியாற்றி வருகிறார். 2001ஆம் ஆண்டுமுதல் நிகழாண்டுவரை முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ரத்த தான முகாம் நடத்தியுள்ளார். வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்கக் கோரி 2008ஆம் ஆண்டில் 6 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளார். இதுதவிர உழவாரப் பணிகள், அ.தி.மு.க.வின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடி அந்தோனி கிரேசி: தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.பி.ஆர். அந்தோனி கிரேசி (54), மாவட்ட மகளிரணி இணைச் செயலராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். இவரது கணவர் ஏ.பி.ராஜேந்திரன் காலமாகிவிட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் வசித்து வருகிறார். 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். வகித்த பதவிகள்: மகளிரணி ஒன்றியச் செயலர் (1976), மாவட்ட மகளிரணித் தலைவி (1991), மாவட்ட மகளிரணிச் செயலர் (1999), 1996 முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினர். தற்போது மாநிலப் பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி இணைச் செயலராக உள்ளார். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment