ஜம்மு- காஷ்மீரில் வன்றை சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம்
குவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியான பர்கான்வானி உள்பட 3 பேர் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத அமைப்பினர் காஷ்மீரில் நேற்று முழு அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தெற்கு காஷ்மீரில் அனந்த நாக், பார முல்லா உள்பட 4 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குர்காம் நகரில் பா.ஜனதா அலுவலகம்
தாக்கப்பட்டது.
போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் தங்கியுள்ள முகாம்களை குறிவைத்து பிரிவினைவாத அமைப்பினர் தீவைப்பு, கல்வீச்சு போன்ற தாக்குதல் நடத்தினார்கள். வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தடியடி மற்றும் துப்பாக்கிசூடு
நடத்தினார்கள்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 4 காவல்நிலையங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு பிரிவினைவாத அமைப்புகளுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment