அம்மா ஜெ. விற்கு மிகவும் பிடித்த நடிகர் ‘தல’ என்பது ஊரே அறியும் ..தனது மகனாகவே நினைத்து அன்புகாட்டி அறிவுரைகள் வழங்குவார்
அம்மா ஜெ.
எங்கு பார்த்தாலும் அஜீத் மற்றும் அவரின் அன்பு மனைவி ஷாலினியை நலம் விசாரிப்பார். சண்டைக் காட்சிகளில், பைக், கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க கூடாது என்பார்.
அம்மா வின் கட்சியில் இணைவதற்கு லட்சோப லட்சம் பேர் தவம் கிடக்க ஒரு முறை அஜீத்தை அரசியல் ஆர்வம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்தார் அம்மா ஜெ. ஆனால் அன்பாக மறுத்தாராம் தல…!
இப்போது மீண்டும் அஜித்தை நோக்கி அரசியல் களம்சூழ்ந்துள்ளது என்கிறார்கள். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது..!
அவரின் தலைமயில் தான் அதிமுக கட்டுக் கோப்பாக இருக்கும் என்பதும் பொதுவான கருத்து.
ஜெ.போலவே தொண்டர்களை சிதற விடாமல் பாதுகாக்கும்பக்குவம் கொண்டவர் சசிகலா.
அதே நேரம் அம்மாவிற்கு இணையான மக்கள் செல்வாக்கும்..புகழும் கொண்டவர் தல..! டெல்லி மேலிடமும் இதே கருத்தை முன் மொழிந்ததாக கூறுகிறார்கள்.
இப்படி இருக்க பொதுகுழு கூடி சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதும் அஜீத்திற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படுமா என்கிற கேள்வி தொண்டர்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப் படுகிறது என்கிறார்கள்…!
உண்மையோ பொய்யோ சமீபகாலமாக அஜித்தைச் சுற்றி அரசியல் வலை பின்னப்டுகிறது என்பது மட்டும் நிஜம்…!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment