Search This Blog n

06 September 2017

ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் தாலி அக்காக்க! தங்கைக்கா?

அக்கா, தங்கச்சியை கட்டப் போவதாக சொன்ன இளைஞர்- விருதுநகர்: இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் மணந்தார் அந்த தொழிலாளி. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. 
இவருக்கு, ரேணுகா தேவி மற்றும் காயத்ரி ஆகிய இரு பெண்களுடன் செப்டம்பர் 4-ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக, திருமணப் பத்திரிகை அச்சடிக்கப்பட்டிருந்தது. இத் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் மாவட்டம் முழுவதும் 
பரவியது.
இந்த தகவல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் கிடைத்துள்ளது.ஊர்மக்கள் அறிவுரை இதைத் தொடர்ந்து ராமமூர்த்திக்கு ஊர் பெரியவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு
 அறிவுறுத்தினர்.
இருவரை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், இதனால் தண்டனை கிடைக்கும் என்றும், திருமண வீட்டாரிடம் போலீஸாரும் எடுத்துக் கூறினர்.பெண்ணின் தந்தை விளக்கம் இந்நிலையில், ரேணுகா தேவியின் தந்தை அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். பின்னர், சமூகநலத் துறை அலுவலர் ராஜத்திடம் மனு அளித்தனர்.
அதில், எனது மகள் ரேணுகா தேவிக்கும், எனது தங்கையின் மகன் ராமமூர்த்திக்கும் செப்டம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தவறுதலாக அச்சடிப்பு திருமண அழைப்பிதழில் எனது தம்பி மகள் காயத்ரியின் பெயரையும் தவறுதலாக அச்சடித்து விட்டோம். அவர், உடல் வளர்ச்சி குன்றிய பெண்.
எனவே, செப்டம்பர் 4 -ஆம் திகதி ரேணுகா தேவிக்கும், ராமமூர்த்திக்கும் மட்டுமே திருமணம் நடத்த உள்ளோம் என எழுதிக் கொடுத்தனர்.ஒரு பெண்ணுடன் மட்டும்… ரேணுகா தேவியுடன் மட்டும் திருமணம் செய்வது போல் அழைப்பிதழ் மாற்றி
 அச்சடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பெரியவர்கள் முன்பு பட்டதாரி பெண்ணான ரேணுகாவை ராமமூர்த்தி திருமணம் செய்து கொண்டார். பரபரப்பான இந்த திருமணத்தை சமூக நலத் துறை ஊழியர்களும் கண்காணித்து அவர் ஒரு பெண்ணை மட்டும் மணந்ததை மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment