This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

24 November 2021

இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது காரணம் இது தானாம்

   இலங்கையர்கள் இந்தியாவில் எட்டு பெண்கள் உள்பட 10  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெண்கள் உள்பட 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இந்தியா சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும் வெளியான தகவலானது, இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது....

22 September 2021

திருச்சியில் இலங்கையை சேர்ந்த 29 அகதிகள் தற்கொலை முயற்சி!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது 29 பேர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇதன்படி, ஆகஸ்ட் 18ம் திகதி திருச்சி மத்திய சிறையில் உள்ள 17 கைதிகள் பல முறைகளைப் பயன்படுத்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளதாக ALJAZEERA செய்தி வெளியிட்டுள்ளது.இரண்டு நாட்களுக்குப் பின்னர் மேலும்...

21 May 2021

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால் இன்று (21) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள்...

27 March 2021

ஒரு திறந்த மடல் சீமானுக்கு - கலாநிதி சேரமான்

முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே.சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள் ஈடுபட்டிருக்கும் சூழலில் உங்களுக்கு மடல் எழுதி சிரமம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம்.தொப்பை வண்டியோடும், வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத்துப்பாக்கிகளுடனும் காவலுக்கு நிற்கும் தமிழக காவல்துறையினரை ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடிப்படகுகளில்...

23 January 2021

தனியார் விடுதி உரிமையாளர் காட்டு யானை மீது தீ வைத்தார்

காட்டு யானை மீது தீ வைத்த தனியார் விடுதி உரிமையாளர்– பாய்கிறது குண்டர் சட்டம் மனிதன்‌ மட்டுமே சமூகமாக வாழக்கூடியவன். உணர்ச்சிகளை அனைத்து மிருகங்களும் வெளிப்படுத்தும், ஆனால் பிறரது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனிதர்கள் தான் என்கிறது சமூக அறிவியல். அதனால் தான் மனிதர்களை மட்டுமே சமூகம் என்கிறோம். சிங்க சமூகம், புலிச் சமூகம், மாட்டுச் சமூகம் என்று நாம் குறிப்பிடுவதில்லை. மனிதனை மட்டுமே மனித சமூகம் ‌என்று குறிப்பிடுகிறோம்.ஆனால்...

22 January 2021

ஓசூரில் தனியார் அடகு நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் ரூ7 கோடி நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ரூ7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பத்து தனிப்படைகள் அமைத்துள்ளது காவல்துறை.ஓசூரில் உள்ள முத்தூட் என்ற தனியார் நகை அடகு வைக்கும் அலுவலகத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள முத்தூட் தனியார் நகை அடகு வைக்கும் நிறுவனம்,...

17 January 2021

பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளான யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து...

நாளை மறுநாள் தமிழகத்தில்பள்ளிகள் திறப்பு சுகாதாரத்துறை தயார் நிலையில்

தமிழகத்தில் நாளை மறுநாள் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் 18லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த...

07 January 2021

இலங்கைக்கு கொவிட் மருந்துடன் வருகை தரும் புதிய அனுமார்?

கொவிட் மருந்து விநியோகத்திலாவது சீனாவை முந்திக்கொள்ள இந்திய முற்பட்டுள்ளது.ஏற்கனவே பீசிஆர் முதல் மாஸ்க் வரை சீனா இலங்கையில் கடை விரித்துள்ள நிiலையில் இந்தியா கொவிட் மருந்துடன் களமிறங்குகின்றது கொவிட் நோய்த் ​தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...

05 January 2021

சைக்கிளில் வந்த கொரோனா தடுப்பு மருந்து. பெரும் அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து போடுவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.அதில், உத்திரப் பிரதேச மாநிலம், பிரதமரின் வாரணாசி தொகுதியில் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில் எடுத்து வரப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.உ.பியில்...