This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

22 November 2016

மூன்றே நாளில் முளைத்த சூப்பர் காதல்..! இனிப்பு கொடுத்து ஆரவாரம்..! இது எங்கே..?

இந்தியாவே வீதிக்கு வந்து விட்டது..! கையில் இருக்கும் ஐநூறு ஆயிரங்களை மாற்றிவிட மாட்டோமா என்று தவிக்கிறார்கள் மக்கள்..!
காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் தவிப்போடு காத்து கிடக்கிறார்கள்..! ஆனால் இரண்டு அழகான இளசுகள் என்ன காரியம் பண்ணாங்க தெரியுமா..! படிங்க..நொந்து போகாம முடிஞ்சா
 வாழ்த்துங்க..!
வேற என பண்றது..! கலி முத்திப்போச்சு..! பெங்களூர் மடிவாலா பகுதியில் இருக்கிறது அந்த அரசு வங்கி. ஐநூறு ஆயிரம் செல்லாது என்று கூறியதுமே..மக்கள் இருக்கும் பணத்தை மாற்றிவிட  நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்..
அந்த வரிசையில் வந்து நின்ற கன்னடத்து பைங்கிளி வைஷ்ணவி..!  அதே வரிசையில் வந்து நின்றான் கன்னடத்து காளை பிரஷாத்..!
இருவருமே வேறு வேறு கல்லூரியில் படிப்பவர்கள்..! முதல் நாள் காலை  இருவரும் சைட் அடித்துக் கொண்டார்கள்..!
பகல் பதினோரு மணிக்கு வைஷ்ணவிக்கு தாகம் எடுக்க அருகில் உள்ள பெண்ணிடம் ஆண்ட்டி தண்ணீர் இருக்கா ப்ளீஸ்.. என்று கேட்க.. கொஞ்ச துடித்துப் போன பிரஷாத் கால் தெறிக்க ஓடிப்போய் மூன்று பாட்டில்ஜில்  மினரல் வாட்டர்  வாங்கி  வந்தான் எக்ஸ்கியூஸ் மீ வாட்டர் என்றதும்  உருகிப் போனாள் வைஷ்ணவி.
அருகில் உள்ளவர்களுக்கும் அவன் ஐஸ் வாட்டர் கொடுக்க புரிந்து கொண்ட மக்கள் சிரித்துவிட்டு வாங்கி தாகம் தீர குடித்தனர்.மதியம் அவள் பார்த்துக் கொள்ளச்சொல்லி விட்டு லஞ்ச் சாப்பிட ஸ்கூட்டியில்
 பறந்தாள்.
தவித்துப் போனான் பிரஷாத்.மூன்று  மணிக்கு வந்தாள் வைஷு.கண்களால் சாப்பிட்டியாடா என்று கேட்டாள்… இல்லை என்று ஜாடை சொன்னான்.
அன்றுமாலை அனைவருக்கும் காபி வரவைத்தான் பிரஷாத். அவளுக்கு மட்டும் இஞ்சி டீ. புல்லரித்துப் போனது கிளி. அடுத்த 
நாளும் வந்தார்கள்.
மெல்ல பேச ஆரம்பித்தார்கள் மக்களுக்கு புரிந்து போனது. அன்று மாலைக்குள்  கொஞ்சம் நெருக்கம் ஆனார்கள். நம்பர் கேட்டான்
 கொடுத்தாள்.
அடுத்த நாள் காலை பக்கிகள் ஒரே ஸ்கூட்டியில் வந்து இறங்க மக்களுக்கு ஒரே சந்தோசம்.. அட அதுக்குள்ளவா என்று கிண்டல் 
செய்தார்கள்.
மதியம் ஒரே ஹோட்டலில் சேர்ந்து சாப்பிடப் போனார்கள். பணம்  மாற்ற வந்த இடத்தில்  மனதையும் மாற்றிக் 
கொண்டார்கள்.
பேங்க் வாசலில் வைத்தே வைஷ்ணவி தனது காதலைக் கூறினாள். அன்று மாலை அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள். மக்கள் வாழ்த்து கூறினார்கள்.ஜோடிகள் வண்டி ஏறி பறந்து விட்டனர்..!  என்னத்தை சொல்றது போங்கோ..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



21 November 2016

ரகசிய அறையில்பெண்ணுடன் இருந்த மதன் அதிரடி கைது!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.

அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் தொடர்பில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக இன்று திருப்பூர் வந்திருந்தார்.

இத்தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர்.

இவரை சென்னை கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகிறது.

சென்னை வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தகர்கண்டில் மதன் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இன்று மதனுக்கு 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



18 November 2016

சட்ட விரோத கமிஷன் வாங்கிக்கொண்டு பணபரிமாற்றம், அம்பலம் ?

செல்லாது’ என அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை பெருமளவில் கமிஷன் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மாற்றித்தருகிற கும்பல்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

இப்படி ஒரு கும்பல் செயல்படுவதை டெல்லி ஊடகம் ஒன்று ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய நடவடிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியது.

இதுபற்றி மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று கூறும்போது, ‘‘பெரும் தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றித்தருவது ரகசிய நடவடிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இதன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறு நான் உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என்றார்.

மேலும், ‘‘இதுபற்றி விரிவான விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்குமாறு என் செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளேன்’’ எனவும் கூறினார்.
எனவே இந்த விவகாரத்தில் விசாரணை வரும் என 
எதிர்பார்க்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

லஞ்சமாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கிய துறைமுக அதிகாரிகள் கைது

குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்துக்கு பல்வேறு சாதனங்களை தனியார் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க துறைமுக அதிகாரிகள் சீனிவாசலு, குமேத்கர் ஆகியோர் லஞ்சம் கேட்டனர்.
சீனிவாசலுக்கு ரூ.2½ லட்சமும், குமேத்கருக்கு ரூ.1½ லட்சமும் லஞ்சம் தர பேரம் பேசப்பட்டது. அவை அனைத்தையும் புதிய ரூபாய் நோட்டுகளாக தர வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்நிறுவன உரிமையாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் ஏற்பாட்டின்படி நேற்றுமுன்தினம் அந்நிறுவன உரிமையாளர் ரூ.4 லட்சத்தை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கொண்டு வந்தார். அதிகாரிகளுக்கு பதிலாக இடைத்தரகர் ருத்ரேஸ்வர் சுனாமுடி அந்த பணத்தை வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது அதிகாரிகள் அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சீனிவாசலு, குமேத்கர், ருத்ரேஸ்வர் சுனாமுடி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குமேத்கர் வீட்டில் சோதனை செய்த போது ரூ.40 ஆயிரம் சிக்கியது. மொத்தம் ரூ.4.40 லட்சம் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தனியார் நிறுவன உரிமையாளர் இது குறித்து கூறுகையில், அதிகாரிகள் வற்புறுத்தி லஞ்சம் கேட்டதால் நான் என்னிடம் இருந்த பணம் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கி கொண்டு வந்தேன் என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


17 November 2016

டெல்லி மற்றும் அரியானாவில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் !

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான அரியானாவில்  இன்று  அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு மாநிலங்களின் எல்லைபகுதிகளில் இந்த நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏதும்
 ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

10 November 2016

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகளுக்கு கோயில்களுக்குள் தடை?

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரும் சனவரி 1ம் திகதி முதல் அமலுக்கு
 வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தனது உத்தரவில், கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணி வது, சுத்தம், நாகரிகம் ஆகிய வற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப்பாடு உள்ளது.
இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க
 வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 சனவரி 1ம் திகதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் 
அணிந்து வரவேண்டும்.
மாறாக, அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் போன்றவற்றை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.
இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிர மாக அமல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



05 November 2016

புதுமண மக்கள்காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வரும் 7-ஆம் தேதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில் சமூக திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் பங்குபெறும் 258 மணமக்களும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.
அதன்படி மணமக்கள் அனைவரும் குறித்த சமுதாய தலைவர்கள் புடைசூழ நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக சைக்கிளில் மணமகன் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
இது நகரத்தில் வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முதல்படி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன நெரிசல், காற்று மாசுபடுதல், ஆரோக்கியம் உள்ளிட்டவையில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், குறித்த நிகழ்வில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>