14 October 2017
ஆசிரியர்களால் நியமிக்கப்பட்ட போலி ஆசிரியை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேலம்பட்டி மலைக்கிராமத்தில் அரசுப்பள்ளியில் போலி ஆசிரியர் பணிபுரிந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் பணிக்கு வருவதில்லை. இருவரும் தமக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை ரூ.5,000 சம்பளத்துக்கு
நியமித்துள்ளனர்.
இரு ஆசியர்களால் நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக பெண்ணும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் பள்ளி பூட்டப்பட்டு கிடப்பதால் மலைக்கிராம குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தால் பின்தங்கியுள்ள வேலம்பட்டியில் போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லை. உரிய வசதிகள் இல்லாததால் வேலமடபட்டி குழந்தைகள் கல்வி கற்க வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
01 October 2017
மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த விவசாயிகள் கைது
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 76 நாட்களை
தாண்டி நீடிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாள்தோறும் விதவிதமான போராட்டங்களை தமிழக விவசாயிகள்
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 76-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
28 September 2017
சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்..குழந்தை…
கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் அருகே கோவை – ஈரோடு சாலையில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகே ஆண் குழந்தை ஒன்று அழுகையுடன் காணப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு
தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண்ணின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனாதையான ஒன்றரை வயது ஆண் குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பெண்ணும், ஆண் குழந்தையும் யார் என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து
வருகின்றனர்.
26 September 2017
மாணவி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு; வாலிபர் கைது
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீஸில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர்
அவரை கைது செய்தனர்.
அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றதாக சஞ்சய்
தெரிவித்தார்.
06 September 2017
ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் தாலி அக்காக்க! தங்கைக்கா?
அக்கா, தங்கச்சியை கட்டப் போவதாக சொன்ன இளைஞர்- விருதுநகர்: இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் மணந்தார் அந்த தொழிலாளி. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி.
இவருக்கு, ரேணுகா தேவி மற்றும் காயத்ரி ஆகிய இரு பெண்களுடன் செப்டம்பர் 4-ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக, திருமணப் பத்திரிகை அச்சடிக்கப்பட்டிருந்தது. இத் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் மாவட்டம் முழுவதும்
பரவியது.
இந்த தகவல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் கிடைத்துள்ளது.ஊர்மக்கள் அறிவுரை இதைத் தொடர்ந்து ராமமூர்த்திக்கு ஊர் பெரியவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு
அறிவுறுத்தினர்.
இருவரை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், இதனால் தண்டனை கிடைக்கும் என்றும், திருமண வீட்டாரிடம் போலீஸாரும் எடுத்துக் கூறினர்.பெண்ணின் தந்தை விளக்கம் இந்நிலையில், ரேணுகா தேவியின் தந்தை அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். பின்னர், சமூகநலத் துறை அலுவலர் ராஜத்திடம் மனு அளித்தனர்.
அதில், எனது மகள் ரேணுகா தேவிக்கும், எனது தங்கையின் மகன் ராமமூர்த்திக்கும் செப்டம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தவறுதலாக அச்சடிப்பு திருமண அழைப்பிதழில் எனது தம்பி மகள் காயத்ரியின் பெயரையும் தவறுதலாக அச்சடித்து விட்டோம். அவர், உடல் வளர்ச்சி குன்றிய பெண்.
எனவே, செப்டம்பர் 4 -ஆம் திகதி ரேணுகா தேவிக்கும், ராமமூர்த்திக்கும் மட்டுமே திருமணம் நடத்த உள்ளோம் என எழுதிக் கொடுத்தனர்.ஒரு பெண்ணுடன் மட்டும்… ரேணுகா தேவியுடன் மட்டும் திருமணம் செய்வது போல் அழைப்பிதழ் மாற்றி
அச்சடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பெரியவர்கள் முன்பு பட்டதாரி பெண்ணான ரேணுகாவை ராமமூர்த்தி திருமணம் செய்து கொண்டார். பரபரப்பான இந்த திருமணத்தை சமூக நலத் துறை ஊழியர்களும் கண்காணித்து அவர் ஒரு பெண்ணை மட்டும் மணந்ததை மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
25 August 2017
இறைவனும் இயற்கையும் வேறு வேறு இல்லை என்பதை உணர்த்தும் காளஹஸ்தி விநாயகர் சிலை!
விநாயகர் சதுர்த்தி என்றாலே, விதவிதமான வடிவங்களில் விநாயகர் நம் தெருக்களில் வலம் வருவார். பொதுவாகவே, தற்போது விற்கப்படும் விநாயகரின் சிலைகளில் செயற்கை வேதிப்பொருள்களும் ஃபேப்ரிக் நிறங்களும் நிறைந்திருக்கும்.
இப்படியான சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
சுற்றுச்சூழல் பாதிப்படையாத வண்ணம் காளஹஸ்தி கோயிலில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு இயற்கை வண்ணங்களால் ஆன விநாயகர் சிலையை வழிபாட்டுக்கு வைத்துள்ளனர். அந்த சிலைகளை வடிவமைத்தவர் ஜலகண்டேஸ்வரர். ஃபைன் ஆர்ட் படித்த இவர் பாரம்பரியமாக மண்பாண்டம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த விநாயகருக்கு வண்ணம் தீட்டியவர் பண்டைய கால ஓவியங்கள் பற்றிய ஆராய்ச்சிசெய்யும் ஓவியர் ஏகன் ஏகாம்பரம்.
"விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் விநாயகர் சிலைகளில் பல வகையான கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.அவற்றை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைக்கும்போது அதில் உள்ள கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து நீர் மாசுபாடு ஏற்படுகிறது; நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்படியான சூழலை மாற்ற, நாம் சிறுசிறு முயற்சிகள் எடுத்தாலே போதும். அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் காளஹஸ்தி கோயிலில் விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பாக செய்யப்பட்ட விநாயகர் சிலை. களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைக்கு இயற்கையான மூலிகைகள் கொண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டன. வண்ணங்கள் கடுக்காய், கற்றாழை, சுண்ணாம்பு, செந்தூரம், காபி கட்டி, மரக்கோந்து போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டன.
இந்த இயற்கை வண்ணங்கள் மிகவும் பளிச்சென்று இருக்கும். இந்த இயற்கை வண்ணங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், இந்த சிலைகளை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைப்பதால் நீர் மாசுபாடும் ஏற்படாது; நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாது.
இந்த இயற்கை களிமண் விநாயகர் சிலையை உருவமைக்க மூன்று நாள்கள் ஆனது. களிமண்ணின் ஈரத்தன்மை மற்றும் தட்ப வெப்பநிலை போன்றவற்றால் சிலையில் வண்ணம் தீட்டுவது சற்று சவாலாக இருந்தது. இதற்கு அதிக நேரங்கள் செலவிடவேண்டியிருந்தது. ஆனால், ஒரு புதிய முயற்சிக்கு சற்று கால அவகாசமும் வேண்டும்தானே."
என்று உற்சாகத்துடன் கூறினார்.
11 August 2017
டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம்..கர்ப்பிணிப் பெண் மீது தடியடி!
நெல்லை : மக்கள் வந்து செல்லும் பாதையில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர், மேலும்
கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இதில் தாக்கப்பட்டுள்ளதால் நெல்லை அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லைமாவட்டத்திலுள்ள
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு
எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Subscribe to:
Posts (Atom)


























