30 November 2015
விசேட சோதனை மாலைதீவு பிரஜைகள் மீது இல்லை???
இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்
வெளியாகியிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து வரப்படும் காட்போட் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சனிக்கிழமையன்று எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை ஒருவர் சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் என்பதும்
குறிப்பி;டத்தக்கது.
28 November 2015
பாஸ்தாவில் அதிகளவு ரசாயனம் : மீண்டும் சிக்கிய நெஸ்லே நிறுவனம்
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பிபிஎம் என்பதை விட பரிசோதிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் 6 பிபிஎம் இருப்பது
தெரியவந்துள்ளது.
இது குறித்து நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதமும் அங்கு பெறப்படாமால் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஆய்வக அதிகாரி அரவிந்த் யாதவ் என்பவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில் நெஸ்லே பாஸ்தா உணவு பாதுகாப்பானது அல்ல எனவும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையே, தங்கள் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் உண்பதற்கு பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதோடு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆய்வகங்களில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தரச்சான்று பெற்ற பின்னர் மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸ் விற்பனையை ஆரம்பித்துயுள்ளது.
இந்த நிலையில், நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
27 November 2015
முதல் இடம்:உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு விருது
நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கபட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தமிழகத்திற்கான விருதை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்வதில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தில்உள்ளது
மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில்
நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை
கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க
காவல்துறைக்கு
உத்தரவிடக்கோரி இருந்தது. இந்த வழக்குகளை தனித்தனியே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, மாவீரர் தினத்தை தமிழகத்தில் கொண்டாட அனுமதி
அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே இன்று கூட்டம் நடைபெருகிறது. ஆனால் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் பெரியத்தான் புலியூருக்கு பதிலாக பழனிசாமி தோப்பில் மாவீரர் தினத்தை நடத்திக் கொள்ளலாம் என
உத்தரவிட்டார்.
மழை கொட்டப்போகுது..நவம்பர் 28,29ம் தேதிகளில். ஜாக்கிரதை!!!:
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
. 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும்
என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால்
தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மழை விட்டும் சோகநிலை மாறாத நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 November 2015
வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா?
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக 1195 பேரின் பெயர் விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த ஜூனில் வெளியிட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர், அவரது மகன் ரணீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 638 பேர் தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவித்தனர்.
ஆனால் பிரனீத் கவுரும் அவரது மகன் ரணீந்தர் சிங்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தகவலை சுவிட்சர் லாந்தின் வரி நிர்வாக அமைப்பு நேற்று தெரிவித்தது. பிரனீத் கவுர், ரணீந்தர் சிங் ஆகியோரின் குடியுரிமை, பிறந்த தேதி விவரங் களை அந்த அமைப்பு வெளியிட் டுள்ளது. வேறு எந்த தகவல்களை யும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக பிரனீத் கவுரும் ரணீந்தர் சிங்கும் 10 நாட்களுக்குள் சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட நபரின் கருப்பு பண விவரங்களை கோர முதலில் சுவிட்சர்லாந்து அரசின் வரி நிர்வாக அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய ஆதாரங்களை அளித்தால் குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள்
அளிக்கப்படும்.
இந்திய அரசிடம் உள்ள தகவல்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறப்பட்டவை. அவை எச்.எஸ்.பி.சி. முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த வங்கியில் இருந்து திருடிய தகவல்கள் ஆகும். அதை ஆதாரமாக ஏற்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்து வருகிறது
குரோம்பேட்டை அரச மருத்துவமனை நோயாளிகள் வெள்ளத்தில் :அவதி!!!
சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்
மிதந்தது.
சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர்.
றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்
தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து நடவடிக்கைகள்
மேற்கொண்டது.
தரைத்தளத்தில் மேலும் மழை நீர் புகுந்து விடாத வண்ணம் மணற் மூட்டைகள் வைத்து தடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பருவமழையின் போது இந்த மருத்துவமனையில் மழை நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற மருத்துவமனையின் சுவரை உடைத்து விடுவதால் மழை நீர் மருத்துவமனைக்குள் புகுவதாக அவர்கள்
குற்றம்சாட்டினர்.
Keywords: சென்னை மழை, வெள்ளம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நீரில் மிதந்தது, தமிழகம், நோயாளிகள்
Subscribe to:
Posts (Atom)





























