சுற்றுலா விசாவில் வந்து நெல் அறுவடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு இந்திய பிரஜைகளை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது, சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் குறித்த இருவரும் நேற்று (புதன்கிழமை) நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குறித்த இரு சந்தேகநபர்களையும் சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment