காவல்துறையினரே அழுத சோகம்! பெங்களூரில் வாழும் கரோலின் ஜெபாரதன் தம்பதிகள் சாப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள். ஒரே ஒரு குழந்தை. ஒரு இரவில் ஏற்கனவே கரோலினை ஒரு தலையாய் காதலித்து ஏமாந்த அத்தை மகன் உறவு கொண்டாடி வந்து வஞ்சகமாக கணவன் மனைவி இருவரையுமே கொலை செய்துவிட்டு
தப்பிவிட்டான்.
என்ன நினைத்தானோ அந்த பாவி குழந்தையை விட்டு விட்டான். தனி வீடு என்பதால் இவர்கள் கொலை செய்யப்பட்டது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடனே தெரியவில்லை
இரண்டு நாட்கள் கழித்து ஒரு சந்தேகத்தில் வீட்டின்
உள்ளே பார்த்த போது அதிர்ந்து விட்டனர்.அலறியபடி போலீசுக்கு தகவல் கொடுக்க அம்மாவை அணைத்தபடி படி பசியால் சுருண்டு கிடந்தது குழந்தை.
காவல்துறையினரே அழுது விட்டார்களாம்! பின் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி கரோலின் அப்பா அம்மாவிடம் ஒப்படைத்தார்கள் ..கொடுமை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment