சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் விமான நிலையத்துக்கு கடந்த 7–ந் தேதி கொல்கத்தாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் சிலரின் உடைமைகளை ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிட்ட போது அவற்றில் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியர்கள் 5 பேரை குடியேற்ற அதிகாரிகள்
கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 18 கிலோ ‘கஞ்சா’ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் வரும் 21–ந்தேதி அவர்களை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டு
உள்ளது.
சீனாவில் போதைப் பொருள் கடத்தல் என்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை அல்லது நீண்டகால சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி ஏற்கனவே 7 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் சீனாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜூலியானாவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment