பாலியல் தொழிலாளிக்கு பிறந்து தற்போது மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இந்திய நாட்டு பெற்றோர்களுக்கு ஒரு உருக்கமான கோரிக்கையை
விடுத்துள்ளார்.
இளம்பெண் ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இளம்பெண் வெளியிட்ட தகவலின்
தமிழாக்கம் இதோ...!!
‘மும்பையில் பாலியல் தொழில் நடைபெறும் சிவப்பு விளக்கு பகுதியான Kamathipura நகரில் தான் நான் பிறந்தேன். என்னுடைய தாய் கேரளாவில் இருந்து கடத்தப்பட்டு இங்கு மும்பையில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுப்படுத்தப்பட்டார்.
ஆனால், மும்பையில் எனது தந்தையை சந்தித்தபோது அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாக தனது பாலியல் தொழிலை நிறுத்திவிட்டு வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
எங்களுக்கு சிறிது வருமானம் வந்தாலும் கூட, இந்த காமதிபுரா நகரை விட்டு வெளியேற முடியவில்லை.
நான் வளர்ந்தபோது இச்சமுதாயத்தில் பல்வேறு அவமானங்களையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன்.
சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து வரும் கருப்பான சிறுமியான என்னை அனைவரும் கேலி செய்தனர்.
மும்பை பள்ளியில் படித்தபோது என்னுடன் யாரும் பேச மாட்டார்கள். என்னுடன் விளையாடவும் வர மாட்டார்கள். நான் நடந்து போகும்போது ‘ஏய், அங்க பாருங்க ஒரு கருப்பு காக்கா நடந்து போகுது’ என சக மாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இவை அனைத்தையும்
சகித்துக்கொண்டேன்.
என்னுடைய 10 வயது வரை என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறியாதவளாக இருந்தேன். என்னுடைய நிலையை ஒரு ஆசிரியர் தவறாக பயன்படுத்திக்கொண்டார். ஆம், கற்பழிப்பு என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த வயதில் ஆசிரியர் என்னை
கற்பழித்து விட்டார்.
ஒருவர் நமது உடலில் எங்கு தொட்டால் சரியானது, எங்கு தொட்டால் தவறானது என்ற அடிப்படை அறிவை கூட நமது கல்வி நமக்கு கற்றுத்தரவில்லை.
நான் கற்பழிக்கப்பட்டேன் என்பது கூட எனக்கு 16 வயது ஆகும்போது தான் புரிந்தது.
இப்போது என்னுடைய ஒரு குறிக்கோள் வீதி வீதியாக நாடகங்கள் நடத்தி அதன் மூலம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத்தர வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது தான்.
உடலுறவு என்றால் என்ன? ஒரு ஆண்மகன் எப்படி நம்மிடம் நடந்துக்கொள்ள வேண்டும்? நம்மை தொடுபவர்கள் எந்த எண்ணத்தில் தொடுகிறார்கள்? என்ற அடிப்படை விழிப்புணர்வை இப்போது ஏற்படுத்தி
வருகிறேன்.
ஆனால், இதுபோன்ற தகவல்களை பிள்ளைகளுக்கு கூறுவது தவறு என இன்றைய பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
நம்முடையை பிள்ளைகள் மற்றவர்களால் கற்பழிக்கப்படுவதை விட இதுபோன்ற தகவல்களை அவர்களுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது.
அதே சமயம், அழகு என்பது நிறத்தில் இல்லை என்பதையும் நமது பிள்ளைகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். நீங்கள் சிவப்பாக அல்லது கருப்பாகவும் இருந்தாலும் கூட நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
அழகு ஒருபோது தோலின் நிறத்துடன் தொடர்புடையது அல்ல. இதனை அவசியம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்’. என பெயர் வெளியிடாத அந்த இளம்பெண் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment