பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், பாகிஸ்தானை சேர்ந்த
நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்கவோ பணியாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை நீடிக்கும்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்களும் இந்திய படங்களுக்கான வேலைகளில் ஈடுபட முடியாது என இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே நிறைவடையும் நிலையில் இருக்கும் படங்களில் பாகிஸ்தான் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதில் எந்த தடையும் இல்லை.
ஆனால், இனிமேலும் புதிதாக துவங்கும் படங்களின் வேலைகளில் அவர்கள் பணியாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment