தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம்
போதியளவு நிதி காணப்படவில்லை என இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ள 42 வயதான வெள்ளச்சாமி ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து கூறியதாவது,
இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இலங்கைக்கு திரும்பி வந்த ஈழஅகதிகளின் மொத்த எண்ணிக்கையின் இருபது சதவீதம் மட்டுமேயாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை மற்றும் கண்டி போன்ற இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.
இலங்கை அரசானது தனது நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களை மீளவும் சொந்த நாட்டிற்கு வருமாறு ஊக்குவிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடி
யேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் இந்தக் கோட்பாடானது போதியளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. தமது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி வரும் பெரும்பாலான குடும்பங்களின் வீடுகள் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் தனியொரு அறையினால் மட்டும் கட்டப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தோம். இதன் காரணமாகவே நாங்கள் அங்கிருந்து வெளியேறி எமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தமைக்கான பிரதான காரணமாகும். எமது பிள்ளைகள் எமது சொந்த நாட்டில் வாழவேண்டும் என நாங்கள் விரும்பினோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாங்கள் மீன்பிடியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எமது படகுகள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் நாங்கள் எமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபடமுடியாதுள்ளது என தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment