தமிழகத்தில் எண்ணூர், சுனாமி குடியிருப்பு வசித்து வருபவர் பழனியின் 3 வயது மகள் ரித்திகா நேற்று முன்தினம் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணமல் போயுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி வீதியில் குப்பை போடும் இடத்தில் சிறுமி வாயில் துணி திணிக்கப்பட்டிருந்த நிலையில் ரித்திகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் பற்றி தகவறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தை ரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றபின் அப்பிரதேசத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ரித்திகா எதிர்வீட்டில் உள்ள ரேவதி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடியது தெரியவந்தது. எனவே ரேவதியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ரேவதி தனது கள்ளக்காதலன் ராஜேசுடன் சேர்ந்து சிறுமி ரித்திகாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ரேவதி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளவர். அவருக்கு 3 வயதில் கமலி என்கிற பெண் குழந்தையுள்ளது.இந்த நிலையில் ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு வந்து செல்வார்.சிறுமி ரித்திகாவும் ரேவதியின் குழந்தை கமலியுடன் விளையாடுவதற்காக ரேவதியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதாக அறியப்பட்டுள்ளது.
வழமைப்போல் நேற்று முன்தினம் மாலையிலும் ரித்திகா ரேவதியின் வீட்டுக்கு சென்றாள். அப்போது ரித்திகா அணிந்திருந்த நகைகள் மீது ஆசை கொண்ட ரேவதி குழந்தை ரித்திகாவின் நகைகளை தனது வீட்டில் வைத்தே அவர் கழற்றி எடுத்ததாகவும், இந்த நேரத்தில் ரேவதியின் கள்ளக்காதலன் ராஜேசும் மதுபோதை குழந்தை ரித்திகாவிடம் தகாதமுறையில் நடந்ததாகவும் ரேவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது தான் சிறுமி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவளது உடலை வீட்டிலேயே ராஜேசும் ரேவதியும் மறைத்து வைத்து விட்டு அன்று இரவு குப்பை வீசும் இடத்தில் வீசியதை பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜேசையும் ரேவதியையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ரித்திகா அணிந்து இருந்த நகைகளை எண்ணூர் ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு அடகு கடையில் இருவரும் 2200 ரூபாவிற்கு அடகு வைத்தமை தெரியவந்தது. அந்த நகைகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரேவதியும் ,ராஜேசும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நகைக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த மகாநந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment