Search This Blog n

15 February 2017

சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் !

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில், சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகிய இருவரும் அடைக்கபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் 
உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, நண்பகல் கார் மூலம் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களுரூவுக்கு புறப்பட்டுச்சென்றனர். மாலை 4.45 மணியளவில் இவர்கள் சென்ற கார் ஓசூர் சென்றடைந்தது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 20 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. 
 பின்னர், பெங்களூர் நகர 48-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி,ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். இதையடுத்து, பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு கைதி எண்  10711 -ம், இளவரசிக்கு  10712-ம் கைதி எண்  
 கொடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment