Search This Blog n

15 February 2017

நீதிமன்றத்திற்கு சசிகலா உடைகள் கொண்டு வந்த கார் மீது தாக்குதல்!

 சசிகலாவின்  உடைகள் கொண்டு வந்த கார் மீது   பெங்களூர் நீதி மன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள்
 உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா இன்று காலை 11. 40 மணிக்கு சசிகலா  போயஸ் கார்டனில் இருந்து மெரினா கடற்கரை சென்றார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை 
செலுத்தினார்.  அப்போது ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றார் என முன்னாள் அமைச்சர் கோகுல 
இந்திரா கூறினார்.
பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து  கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். 
தொடர்ந்து பயணத்தை ஆரம்பித்த சசிகலா, இளவரசி மாலை 4.45 மணியளவில் ஒசூரை சென்றடைந்தது.
நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தார்.  20 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. இதில் சசிகலா உடைகள் கொண்டு வந்த கார் உள்பட தமிழக் பதிவு எண்கள் கொண்ட 5 கார்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து  போலீசார் கூட்டத்தினர் மீது 
தடியடி நடத்தினர்.
பெங்களூர் நகர 48-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி,ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். சுதாகர்ன் மட்டும் சரண் அடைய வில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர சரணடையவில்லை என அவர் சார்பில் மனு கொடுக்கபட்டு உள்லது. 
இதனிடையே மாலை 5 மணியளவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார்.பார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment